ரணில் எனும் முரண்பாடு!

நஜீப்

நன்றி:01.02.2026 ஞாயிறு தினக்குரல்

தேர்தலில் ஜனாதிபதிக் கதிரையில் அமர முடியாது போனவர் ரணில். மாமனார் ஜேஆர்.மூலம் வாரிசாக அரசியலுக்கு வந்தார். நாட்டில் அதிகாரத்துக்கு வந்த அனேகமானர்கள் வாரிசுகள்தான். இந்த ரணிலை ராஜபக்ஸாக்களே ஜனாதிபதி கதிரையில் அமர்த்தி அழகு பார்த்தார்கள். அதில் அவர்கள் தமது நலன்களையும் பாதுகாத்துக் கொண்டார்கள்.

தற்போது இந்த ரணில் மிகப் பெரிய முரண்பாடாக செயலாற்றி வருகின்றார். ஜனாதிபதித் தேர்தலில் ஒரு கோடி வாக்குகள் பெற்று வெற்றி என்றார். மனிதன் பிரதான போட்டியாளராக கூட அங்கு இருக்கவில்லை. அரசியலில் இருந்து ஒதுங்குவதாகவும் சொன்னார்.

மற்றுமொருமுறை சஜித்துக்கு கட்சியை கையளிப்பதாக கூறிய அடுத்த நாளே தான் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் நாட்டை தான்னால் மீண்டும் பொறுப்பேற்கத் தயார் என்றார்.

பிரதான பீடாதிபதிகள் தலைமையை இளையவர்களிடம் ஒப்படைக்குமாறு கேட்க. ஆம் நான் ஒதுங்கித்தானே இருக்கின்றேன் என்றார். நீதி ஆளைவிரட்டும் போது மரணப்படுக்கை நோயாளியாகி விடுகின்றார்.

Previous Story

ஈரானின் Master Plan..!

Next Story

ඇමරිකානු රාජ්‍යතාන්ත්‍රිකයන් 52ක් ප්‍රාණඇපයට ගෙන ඉරානය කළ බිහිසුණු ක්‍රීඩාව