ரணில் அமைச்சு பதவிகள்:  மைத்திரி அதிரடி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் புதிய இராஜாங்க அமைச்சர்கள் இன்று பதவியேற்றுள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற பதவியேற்பு நிகழ்வில் பல கட்சிகளை சேர்ந்த 38 பேர் ராஜாங்க அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.

புதிய இராஜாங்க அமைச்சர்கள்

ரணில் கொடுத்த அமைச்சு பதவிகள் - அதிரடி காட்டிய மைத்திரி | Sri Lanka Political Issue Maithri Ranil

இந்நிலையில் கட்சியின் தீர்மானத்திற்கு மதிபளிக்காமல் அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளைப் பெற்றவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, லசந்த அழகியவன்ன, ஜகத் புஸ்பகுமார, சாமர சம்பத் தசநாயக்க ஆகிய 4 பேர் இராஜாங்க அமைச்சர் பதவிகளை பெற்றுள்ளனர்.

மைத்திரி நடவடிக்கை

ரணில் கொடுத்த அமைச்சு பதவிகள் - அதிரடி காட்டிய மைத்திரி | Sri Lanka Political Issue Maithri Ranil

மேலும், அமைச்சரவை அமைச்சர் பதவிக்காக துமிந்த திஸாநாயக்க காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவர்களுக்கு எதிராகவே நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். .

Previous Story

UK அமைச்சரவையில் ஒரு இலங்கை வம்சாவளியினர்

Next Story

"இலங்கையில் எந்தவொரு மாகாண சபையிலும் தமிழர் பிரதம செயலராக இல்லை"