ரணிலுக்கு தொடர்ந்தும் நெருக்கடி.!

நஜீப்

நன்றி 02.11.2025 ஞாயிறு தினக்குரல்

சில தினங்களுக்கு முன்னர் ரணில் மீண்டும் நீதிமன்றக் கூண்றில் ஏற்றப்பட்டார். லண்டன் போனது  உத்தியோகபூர்வ அழைப்பில்தான் என்று சட்டத்தரணி திலக் மாரப்பான வாதிட்டார். நீதிபதி அது அரசின் உத்தியோகபூர்வ அழைப்பா எனக் கேட்க, மாரப்பன ஆம் என்றார். அதுவும் ஆராயப்படவேண்டும்.

நீதிமன்றத்தின் கட்டளையே இன்றி ஆறு வைத்திய நிபுணர்களின் கூட்டு அறிக்கையைச் சமர்ப்பித்து ரணில் பிணையில் வெளியேறியதும் சார்ச்சையாகியுள்ளது. அதுபற்றியும் இப்போது அரச வைத்திய அறிக்கை கோரப்பட்டிருக்கின்றது.

நீதிமன்ற வரலாற்றில் அப்படி ஒருபோதும் நடந்ததில்லை. அதிதீவிர பிரிவில் சீரியசாக இருந்து தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்தது. ஹாயாக புத்தகம் படித்தது செல்பி எடுத்து எல்லாம் நீதி மன்றத்தில் கேள்விக்குள்ளாகி இருக்கின்றது.

ரணிலில் இரத்த ஓட்டத்தில் அடைப்புக்கள். இதயத்துக்கு வேறுவழியிதான் இரத்தம் பாய்வதாகவும் திலக்மரப்பன கூறினார். பிணை வழங்கப்பட்டதும் இரத்த ஓட்டம் சரியாகி விட்டதா என்றும் நீதிபதி அங்கு கேள்வி எழுப்பி இருந்தார்.

Previous Story

වන්නි නායකට නැමුණ නීතිය‘ රන්මල්ගෙ’ නංගීට කෙළින් වෙයි!!

Next Story

ජවිපේ ඇතුලාන්තයේ ඓතිහාසික වටිනාකම්!