ரணிலின் அமைச்சரவையில் பங்கேற்க மாட்டோம்- ரஞ்சித் மத்தும பண்டார

ஹரின் கனதியான அமைச்சை எதிர்பார்க்கின்றார்!

ஐக்கிய தேசியக் கட்சியின்தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சரவையில் ஐக்கிய மக்கள் சக்தி அமைச்சு பொறுப்புக்களை ஏற்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விக்ரமசிங்கவின் அமைச்சரவையில் இணைவதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு எதனையும் தமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கவில்லை என கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

புதிய பிரதமராக விக்கிரமசிங்க பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவையை விக்ரமசிங்க உருவாக்குவார் என்று ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே நான்கு நிபந்தனைகளின் அடிப்படையில் புதிய அமைச்சரவையை அமைப்பதற்கு உடன்படுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்திருந்தது.

குறிப்பிட்ட கால எல்லைக்குள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும்,

புதிய அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு அவர் இணங்க வேண்டும்.

நாட்டின் நிலைமை ஸ்திரமானவுடன் மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்பதே நிபந்தனைகளாகும்.

எனினும் சஜித் தரப்பின் அணுகுமுறையை எதிர்த்து அந்த கட்சியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ ஏற்கனவே விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நமக்கு வரும் தகவல்படி தனக்குக் கனதியான ஒரு அமைச்சு கிடைக்குமானால் ஹரின் பர்ணாந்து ரணில் அமைச்சரவையில் இணைந்து கொள்ளத் தயார் நிலையில் இருக்கின்றார். துறைமுகம் அல்லது வர்த்தக அமைச்சை அவர் எதிர்பார்க்கின்றார் என்றும் தெரிகின்றது.

 ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகி சுயேச்சை பாராளுமன்ற உறுப்பினராக யெற்பட தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ அதிரடியாக அறிவிப்புச் செய்திருந்தார்.

அவருடன் இன்னும் 10 அல்லது 25 பேர் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகலாம் எனவும் தகவ்கள் வெளியான நிலையில்  ஹரின் பெர்னாண்டோ தனது பேஸ்புக் மூலம் சிறிய ஆனால் காரசாரமான பதிவொன்றை இட்டுள்ளார்.

அதில் இப்படி குறிப்பிடப்பட்டுள்ளது.

Take a decision, if you take I will stay with u , if u can’t I will stand by people ! ( முடிவு எடு, நீ எடுத்தால் நான் உன்னுடன் இருப்பேன், உன்னால் முடியாவிட்டால் நான் மக்களுக்காக நிற்பேன்!) என்பதாகும்.

ரணில் ஹரீன் உறவு வலுவாக உள்ள நிலையிலும், ரணில் பிரதமராக வரவுள்ளதாகவும் நம்படுகிறது.  அவ்வாறான நிலையில் இடைக்கால அரசாங்கத்தை சஜித் பொறுப்பேற்காவிட்டால் ஹரின் ரணிலுக்கு ஆதரவளிப்பது உறுதியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous Story

மகிந்த, நாமல் ,ஜோன்ஸ்டன் மற்றும் 17 பேர் வெளிநாடு செல்ல தடை

Next Story

ரணில் பிரதமர்: மஹிந்த உத்தரவு கோட்டா நிறைவேற்றுகிறார்!