யூடியூப் பிரபலத்தை பார்க்க..பஞ்சாப் டூ டெல்லி! 250 கிமீ சைக்கிளில் சென்ற சிறுவன்..பெற்றோர் அதிர்ச்சி

யூடியூபர் மேல் உள்ள மோகத்தால் 250 கிலோமீட்டர் தூரம் பஞ்சாப்பில் இருந்து டெல்லிக்கு சைக்கிளிலேயே 9-ஆம் வகுப்பு சிறுவன் சென்றுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டில் இருந்த 13 வயது சிறுவன் திடீரென காணாமல் போனதாக பெற்றோரும்.. புகாரின் பேரில் போலீசாரும் 3 நாட்களாக தீவிரமாக தேடிய நிலையில் அவன் டெல்லியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளான்.

சமூக வலைத்தளங்கள் ஆதிக்கம் பெருகிவிட்ட இன்றைய கால கட்டத்தில் யூடியூப்களில் வீடியோக்களை பதிவேற்றி லட்சக்கணக்கான சப்ஸ்கிரைபர்களை பெற்று வருமானமும் ஈட்ட முடிகிறது.

இதற்காக வித்தியாசமான கண்டெண்ட்டுகளை உருவாக்கி பலரும் தங்கள் திறமையை காட்டி வருகின்றனர்.

250 கி.மீ சைக்கிளிலேயே.. இப்படி யூடியூபர்களை தங்கள் ரோல் மாடல் ரேஞ்சுக்கு எண்ணும் சில 2கே கிட்ஸ் வீட்டுக்கு தெரியாமல் விபரீத செயல்களிலும் ஈடுபட்டு விடுகின்றனர். இப்படித்தான் பஞ்சாபின் பாடியாலா பகுதியில் வசிக்கும் 13-வயது சிறுவன் வீட்டில் யாருக்கும் தெரியாமல் ‘Triggered Insaan’ என்ற யூடியூப் சேனலின் நிசய் மல்ஹானை காண பஞ்சாப்பில் இருந்து டெல்லிக்கு 250 கி.மீட்டர் சைக்கிளிலேயே வந்திருக்கிறார்.

சிறுவர்கள் மத்தியில் பிரபலம் நிசய் மல்ஹான் நகைச்சுவையாகவும் கேலியாகவும் பல வீடியோக்களை தனது Triggered Insaan என்ற யூடியூப் பக்கத்தில் வீடியோக்களை போட்டு வருகிறார். யூடியூப்பில் இவருக்கு 1.7 கோடி சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர்.

சிறுவர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கும் இவரைத்தான் காண 13-வயது சிறுவன் டெல்லிக்கு வீட்டுக்க்கு தெரியாமல் கிளம்பியிருக்கிறான். 8 ஆம் வகுப்பு படிக்கும் இந்த பையன் திடீரென கடந்த 4 ஆம் தேதி கிளம்பி சென்றதால் பெற்றோர் வீட்டில் தேடி அலைந்து இருக்கின்றனர்.

என்ன ஆனதோ.. வீட்டில் இருந்த பையன் திடீரென காணவில்லை என்பதால் பையனுக்கு என்ன ஆனதோ என்று அலைந்து திரிந்த பெற்றோர் கடைசியில் போலீஸ் நிலையத்திலும் புகார் தெரிவித்து இருக்கின்றனர். இதையடுத்து போலீசாரும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அவனது சைக்கிளும் காணாமல் போனதால் சிறுவன் சைக்கிளில் தான் எங்கோ சென்றிருக்கக்கூடும் என்று போலீசார் சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு விசாரணையில் ஈடுபட தொடங்கினர். டெல்லியில் சிறுவன் மேலும் இந்த சிறுவன் யூடியூப்பில் நிசய் மல்ஹான் வீடியோக்களை அதிகம் பார்த்தது போலீசாருக்கு தெரியவந்தது.

இதனால், உஷாரான போலீசார் டெல்லி காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். டெல்லி போலீசாரும் நிசய் மல்ஹான் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பு சென்று அங்குள்ள சிசிடிடி கேமராவை ஆய்வு செய்தனர்.

நிசய் மல்ஹனுக்கும் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டதால், அவரும் சிறுவன் தனது பெற்றோரை தொடர்பு கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தார்.

ஏமாற்றத்துடன் சிறுவன் மேலும் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள நிசய் மல்ஹான் வீட்டிற்கு சென்ற போது, அவர் துபாய் சென்று இருப்பது தெரியவந்தது.

தொடர்ந்து போலீசார் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் தேடினர். அப்போது, நிசய் மல்ஹானை சந்திக்க முடியாமல் ஏமாற்றத்துடன் பார்க் பகுதியில் நின்ற சிறுவனை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

வீட்டில் பெற்றோருடன் சொல்லாமல் இப்படி தனியாக 250 கிலோமீட்டர் தூரம் சைக்கிளில் பயணம் செய்த சிறுவனுக்கு போலீசார் அறிவுரை கூறினர்.

Previous Story

சப்ரி யாரது பிரதிநிதி!

Next Story

அமெரிக்காவுக்கு செக்.. சவுதி அரேபியா செய்த காரியம்