யாருடா எர்டோகன்-பைடன்!

-யூசுப் என் யூனுஸ்-

நேட்டோ நாடுகளின் கூட்டம் சில தினங்களுக்கு முன்னர் லிதுவேனியாவில் நடைபெற்ற போது அங்கு வந்திருந்த தலைவர்கள் சிலர் தனிப்பட்ட ரீதியிலும் சந்தித்துக் கொள்வதற்கு ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தது. மா நாடுகள் நடக்கின்ற போது இப்படி சந்திப்பு நிகழ்வது இயல்பானது.

இப்படியாக ஒரு சந்திப்பு அமெரிக்க-துருக்கிய அதிபர்களுக்கிடையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது அந்தச் சந்திப்புக்காக  துருக்கிய அதிபர் எர்டோனுடன் அவரது பிரதானிகள் சிலரும் வந்திருக்கின்றார்கள். இந்தச் சந்தர்ப்பத்தில் அவரை எதிர்பார்த்திருந்த அமெரிக்க அதிபர் பைடனுக்கு ஆளை இனம் கண்டு கொள்வதில் ஒரு தடுமாற்றம் ஏற்பட்டிருக்கின்றது.

அப்போது யார் ஏர்டோகன் என்று அமெரிக்க அதிபர் பைடன் அங்கு கேட்டிருக்கின்றார். இது இன்று வைரலான செய்தியாக பரவி வருகின்றது. பைடன் வயதுதான் இதற்கெல்லாம் காரணம் என்றும் விமர்சனங்கள். ஐரோப்பாவைப் பெருத்தவரை எர்டோகன் ஒரு ஹீரோ.

இதனை ஜேர்மன் கூட பகிரங்கமாக சொல்லியும் வருகின்றது. அத்துடன் எர்டோகன் இருபது வருடங்களுக்கும் மேலாக துருக்கியில் வெற்றிகரமான அதிபராக இருக்கும் போது பொது அறிவு மட்டத்திலாவது பைடன் அவரை அறியாமல் போனது எப்படி?

நன்றி: 16.07.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

கருத்தடை டாக்டர் சாபி சிஹாப்தீன்!

Next Story

குர் ஆன் எரிக்கப்பு ஐ.நா. தீர்மானத்தில் இந்தியா என்ன செய்தது?