-நஜீப்-
நன்றி: 26.01.2025 ஞாயிறு தினக்குரல்
கிளீன் ஸ்ரீலங்கா விவாதத்தில் கலந்து கொண்டு பேசும் போது தனக்கு வந்த ஒரு அனாமதய-மொட்டைக் கடிதம் பற்றி அமைச்சர் சமந்த வித்தியாரத்தன அங்கு குறிப்பிட்டிருந்தார். அதனைத் தேடிப்பார்த்த போது கதை உண்மை.

செந்தில் தொண்டமான் அடம்பிட்டிய திக்வெல்ல தோட்ட டிஸ்லேன் பங்களாவையும், வடிவேல் ஹாலிஎல தோட்ட உனகொல்ல பங்களாவையும் (பல வருடங்களாக) சட்ட விரோதமாக ஆக்கிரமித்திருப்பது அதில் சொல்லப்பட்டது. அதிகாரிகள் சட்ட நடவடிக்கைகளில் இறங்கிய போது செந்திலும், வடிவும் அங்கிருந்து ஸ்கெப்பாகி இருக்கின்றார்கள்.

இதுவும் கிளீன் ஸ்ரீலங்கா தான். பாராளுமன்றத்தை குடிமக்கள் கிளீன் பண்ணித் தந்திருக்கின்றார்கள். அடுத்த வேலைகளை நாம்தான் செய்ய வேண்டும் என்று சமந்த கூறுகின்றார்.
முன்னாள் ஜனாதிபதிகளின் சொகுசு வீடுகளுக்கு மாதந்தக் கட்டணம்: மஹிந்த 46, சந்திரிகா 30, மைத்திரி 9 இலட்சம் என மதிப்பீடு. கோட்டா, ஹேம பிரேமதாச வீடுகளில் இருந்து ஓட்டம். ரணில் சொந்த வீட்டில்.
இதுவும் கிளீன் ஸ்ரீலங்காதான். அடுத்து நாடாளுமன்றத்தில் இனி ஓசிச் சாப்பாடு கிடையாது. கட்டணம் செலுத்தி உறுப்பினர்கள் விரும்பியதை சாப்பிடலாம். இது வாக்குறுதியும் கிளீன் லங்காதானே என அமைச்சர் சமந்த அதிரடி.!





