-நஜீப்-
மன்னார்-முசலி உள்ளூராட்சி சபைக்கும் நாம் மேற்சொன்ன வகையில் மற்றுமொரு புதிர் கூட்டணி தோன்றி இருப்பதாகத் தகவல். முசலி வன்னித் தளபதி ரிசாட் கோட்டை. அதனை எப்படியாவது இடிக்க வேண்டும் என்று மு.கா. ஹக்கீமும் ஆளும் மொட்டு அணி விசுவாச அரசியல் செய்யும் மஸ்தானும் வித்தியாசமான வியூகம் அமைத்து (மரம்-மொட்டு) களத்தில் இருப்பதாகவும் செய்தி.
அதே போன்று மஸ்தான் தரப்பு, முசலியில் யானை அணியிலும் தனது ஆட்களைக் களத்தில் இறக்கி இருப்பதாக அங்கிருந்து நமக்கு வருகின்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. தாவரத்துத் தலைவர் இன்னும் மொட்டு மீது விசுவாசத்தில் இருப்பதைத்தான் இந்த வியூகத்தில் நாம் பார்க்க முடிகின்றது.
கண்டியிலும் இப்படியான வித்தியாசமான வியூகம் போடப் போன இடத்தில் சறுக்கி விழுந்ததால் பல வேட்பு மனுக்கள் மண் கவ்வி இருக்கின்றது.
ஆனால் இதன் பின்னணியில் சதி என்றும் ஒரு கதை. வெளியே போன வேட்பாளர்களிடத்தில் பயப்பட வேண்டாம். கட்சியில் காரியம் பார்ப்பவர் வழக்குப் போட்டிருக்கின்றார் என்று சமாதனம் சொல்லி வருகின்றார்கள் சதிகாரர்கள். நாம் தேடிப் பார்த்ததில் வழக்குப் போட்ட கதை பொய்யானது.
நன்றி: 12.02.2023 ஞாயிறு தினக்குரல்