மொட்டுவில் பல அணிகள்-ரணில்

-நஜீப்-

இந்திய ஊடகமொன்றுக்கு செவ்வி கொடுகின்ற போது தற்போது மொட்டுக் கட்சி பல அணிகளாக பிளவு பட்டிருக்கின்றது. ஒன்று என்னுடனும் மற்றது சஜித் அணியுடனும் மற்றது மஹிந்தவின் கட்டுப்பாட்டிலும் இன்னொன்று சுதந்திரமாகவும் இயங்கி வருகின்றது என்று சுட்டிக்காட்டி இருக்கின்றார் ஜனாதிபதி ரணில்.

அதே நேரம் நீதி மன்றம் அண்மையில் ராஜபக்ஸாக்களுக்கு எதிராக வழங்கிய தீர்ப்புப் பற்றியும் அவர் அங்கு பேசி இருக்கின்றார். கடந்த காலப் பொருளாதார நெருக்கடிகளுக்கு ராஜபக்ஸாக்கள் மட்டும் காரணம் என்று தான் நினைக்கவில்லை என்றும் அவர் அந்த சந்திப்பில் சுட்டிக் காட்டி இருந்தார்.

SLPP Dismayed Over President's Indifference To Demands: Decides Not To "Push For" Ministerial Positions

எனவே பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்ஸாக்கள் காரணம் என்ற நீதி மன்றம் வழங்கி இருக்கின்ற தீர்ப்புக்கு எதிராக நேரடியாகவும் மறைமுகமாகவும் நாடாளுமன்றத்திலும் அதற்கு கெளியேயும் இப்போது பரவலாக கருத்துக்கள் தெரிவிக்கபட்டு வருகின்றது.

இதற்கிடையில் சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி இந்த நீதி மன்றத் தீர்ப்புக்கு சாதகமாகவும் சம்பந்தப்பட்டவர்கள் குடியுரிமை நீக்கப்பட வேண்டும் என்று இப்போது நாடு தழுவிய கையெழுத்து வேட்டை ஒன்றை நடத்திக் கொண்டிருக்கின்றது.

நன்றி: 26.11.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

தேர்தல் உறுதியும் கள நிலமைகளும்!

Next Story

அரச ஊழியர் சம்பளம் ஓய்வூதியம் அதிகரிப்பு தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சரின் அறிவிப்பு