மைத்திரிக்கு மரண பயம்!

-நஜீப்-

முன்னாள் ஜனாதிபதி மைத்திரி ஈஸ்டர் தக்குதலுக்கான உண்மையான குற்றவாளிகளைத் தனக்கு தெரியும். நீதிமன்றம் எனது உயிருக்கு உத்தரவாதம் கொடுத்தால் நான் அதனை அங்கு வெளியிடுவேன் என்று சில தினங்களுக்கு முன்னர் கூறி நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

அதுவும் கோட்டா வெளியிட்ட புத்தகம் போல்தான் இருக்கும் என்று நாம் நம்புகின்றோம். மைத்திரிக்கு இப்படியான மரண பயம் வந்தது இது முதல் முறையல்ல. ஜனாதிபதி தேர்தலில் அவர் நின்றபோதும் அவருக்கு ஒரு மரண பயம் இருந்தது.

உண்மையைச் சொல்வதற்கும் அவருக்கு இப்போது மரண பயம்  வந்திருக்கின்றது. தான் சிங்கப்பூர் வைத்திய சாலையில் இருந்த நேரத்தில் தாக்குதல் நடந்ததால் தனக்கு அது பற்றி எதுவும் தெரியாது என்று அவர் முன்பு ஒரு வாக்குமூலம் கொடுத்திருந்தார்.

ஆனால் அவர் அந்த நாட்களில் வைத்தியசாலையில் இருக்கவில்லை என்பது பின்னர் தெரிய வந்தது. எனவே மைத்திரி யாருடையதோ தேவைக்காகத்தான் இப்போது நாட்டை குழப்பி வருகின்றார். பலர் மைத்திரியை மனநோய் வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டு வருகின்றனர்.

நன்றி: 31.03.2024 ஞாயிறு தினக்குரல்

Previous Story

கனடா வாழ் தமிழ்-முஸ்லிம் மக்கள் அனுரவிடம் விடுத்துள்ள கோரிக்கை

Next Story

பாடசாலை கட்டமைப்பில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்