மோடி‛சைத்தான்’  பாகிஸ்தான் மாஜி கிரிக்கெட் வீரர் சயீத் அன்வர்.!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் 1989 முதல் 2003 வரை சயீத் அன்வர் விளையாடினார். இவர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியை பாகிஸ்தான் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரும் மாஜி கேப்டனுமான சயீத் அன்வர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

எத்தனை முறை அசானுக்காக உங்கள் பேச்சை நிறுத்தினாலும் கூட நீங்கள் சாத்தான்கள் பிடித்த இந்துவாகவே இருப்பீர்கள் என கூறியுள்ள வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இதற்கு தற்போது நெட்டிசன்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், சயீத் அன்வரை கடுமையாக தாக்கி பேச தொடங்கி உள்ளனர்.

இந்திய பிரதமர், அரசியல் கட்சி தலைவர்களை அண்டை நாட்டின் அரசியல் கட்சி தலைவர்கள் அடிக்கடி விமர்சனம் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அதேவேளையில் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் உள்ளிட்ட சில தலைவர்கள் பிரதமர் மோடியையும், வெளியுறவு கொள்கைகளையும் புகழ்ந்து பேசி வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க சில வேளையில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இந்தியா குறித்தும், இந்திய தலைவர்கள் குறித்தும் வேண்டும் என்றே கடும் சொற்களால் விமர்சனம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். சயீத் அன்வர் விமர்சனம் அந்த வகையில் தான் தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரான சயீத் அன்வர் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

அதாவது சயீத் அன்வர் ஒரு கூட்டத்தில் சமீபத்தில் பேசினார். என்ன சொன்னார்? அப்போது அவர், இந்திய பிரதமர் என குறிப்பிட்டு ‛‛ஆசான் (மசூதி தொழுகைக்கான அழைப்பு) சத்தம் கேட்டு உங்கள் பேச்சை எத்தனை முறை நிறுத்தினாலும் நீங்கள் சைத்தான்கள் பிடித்த இந்துவாகவே இருப்பீர்கள்” என தெரிவித்துள்ளார். அதேபோல் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் அவர் விமர்சித்துள்ளார்.

என்ன சொன்னார்?

பிரதமர் மோடி குஜராத்தில் உரையாற்றியபோது மசூதியில் இருந்து ‘ஆஸான்’ சத்தம் கேட்டு பேச்சை நிறுத்தினார். அதேபோல் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் கடந்த ஆண்டு ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் நடந்த கூட்டத்தில் ‘ஆசான்’ சத்தம் கேட்டு பேச்சை நிறுத்தினார். இந்த 2 சம்பவங்களுக்கும் பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோருக்கு பாராட்டு கிடைத்தது.

இந்நிலையில் தான் சயீத் அன்வர் இருவரையும் விமர்சனம் செய்துள்ளார். கடும் விமர்சனம் இதற்கிடையே சயீத் அன்வர் பேசிய வீடியோ தற்போது இணயைதளங்களில் வெளியாகி உள்ளது. இதற்கு இந்தியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு, சயீத் அன்வரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

சயீத் அன்வர் ஒரு இடதுகை பேட்ஸ்மேன். தொடக்க ஆட்டக்காரரான இவர் பாகிஸ்தான் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார். இவர் 1989 முதல் 2003 வரை டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று விளையாடினார். 55 டெஸ்ட் போட்டிகளில் 4,052 ரன்களும், 247 ஒருநாள் போட்டிகளில் 8,824 ரன்களும் அவர் எடுத்திருந்தார்.

கடும் விமர்சனம்

இந்தியாவில் இயல்பானது தான் இந்தியாவில் தேர்தல் பிரசாரம் மற்றும் பொதுக்கூட்டங்களின்போது பிரதமர் நரேந்திர மோடி முதல் அனைத்து கட்சி தலைவர்களும் பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இப்படி பேசும்போது சில சந்தர்ப்பங்களில் மசூதிகளில் தொழுகைக்கான ஆசான் அழைப்பு விடுக்கப்படும். இதையடுத்து தலைவர்கள் ஆசான் அழைப்பு முடியும் வரை பேச்சை நிறுத்தி அதன்பிறகு துவங்குவதை வாடிக்கையாக வைத்துள்னளர்.

இதனை பாஜக, காங்கிரஸ் தலைவர்கள் உள்பட பல கட்சியின் தலைவர்கள் பின்பற்றி வருகின்றனர். கடந்த ஆண்டு பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்ட காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி நீலகிரி மாவட்டம் கூடலூரில் பேசினார். அப்போது மசூதியில் தொழுகைக்கான ஆசான் அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து அவர் தனது பேச்சை 2.45 நிமிடங்கள் வரை நிறுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Previous Story

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள மஹிந்த தலைமையில் ஆராய்வு

Next Story

இலங்கை:  திரும்பி சென்ற 17 கப்பல்கள்