மூன்று ஏவுகணைகளை இடைமறித்து அழித்த UAE

 


மேற்கு ஆசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மீது ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹவுதி பயங்கரவாத அமைப்பு ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது.இந்நிலையில் நேற்று முன்தினம் அடுத்தடுத்து வந்த மூன்று ஏவுகணைகளை, தன் ஏவுகணைகளால் இடைமறித்து தாக்கி அழித்ததாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் மக்கள் வசிக்கும் பகுதியில் நடைபெறாததால் பாதிப்பு ஏதுமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதற்கிடையே இந்த ஏவுகணை தாக்குதலுக்குஅவ்லியாவாத்அல்அக்என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஈராக் மற்றும் ஏமன் நாடுகள் தொடர்பான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கொள்கைகளை எதிர்த்து, அபுதாபியை குறிவைத்து நான்கு ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக, அந்த அமைப்பு கூறியுள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரியில் சவுதி அரேபியா அரண்மனை மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலுக்கும் அவ்லியா அமைப்பு பொறுப்பேற்றது. இந்த அமைப்பு, ஈராக்கில் இருந்து செயல்படுகிறது. இந்த அமைப்பின் தாக்குதலுடன், ஏமனின் ஹவுதி அமைப்பின் தாக்குதலையும் சமாளிக்க வேண்டிய நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளது.

Previous Story

ஜே.வி.பியின் வாக்கு 80 வீதமாக அதிகரித்துள்ளது

Next Story

யுக்ரேன் : இந்தியா எந்த பக்கம்?