மூணே மூணு நிமிஷ திருமணம்!

குவைத் நகரம்: ஆயிரம் கனவுகளுடனும், எதிர்பார்ப்புகளுடனும் ஒரு ஜோடி திருமணம் செய்துள்ளது. ஆனால், அதற்குள் என்ன நடந்தது? இந்த சம்பவம்தான் இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. குவைத் நாட்டை சேர்ந்தவர்கள் இந்த தம்பதி..

கடந்த 2019ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள்.. திருமணம் முடிந்ததுமே, மண மேடையில் இருந்து கீழே தம்பதி இறங்கி வர முயன்றார்கள்.. அப்போது மணப்பெண்ணுக்கு திடீரென கால் இடறிவிட்டது. இதனால், அவருடன் நடந்து வந்து கொண்டிருந்த மணமகன், அந்த பெண்ணை “முட்டாள், பார்த்து நடக்க மாட்டியா?” என்று திட்டினார்..

 மணமகன்

இதைக்கேட்டு மணப்பெண் அதிர்ச்சி அடைந்தார்.. அப்போது உறவினர்களும், நண்பர்களும் சுற்றிலும் இருந்ததால், மணப்பெண்ணுக்கு இது பெருத்த அவமானமாகிவிட்டது. திருமணம் முடிந்த 2 நிமிஷத்திலேயே இப்படி மணமகன் தன்னை திட்டியதை அந்த பெண்ணால் சற்றும் தாங்கிக்கொள்ள முடியவில்லை..

அதனால், உடனே தனக்கு விவாகரத்து வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.  இதைக்கேட்டதுமே, அங்கிருந்தவர்கள் அனைவரும், கல்யாணப் பெண் ஏதோ கிண்டல் செய்கிறார் என்று நினைத்துள்ளார்கள். ஆனால், மணப்பெண்ணின் ஆவேசத்தை பார்த்துதான், ஒட்டுமொத்த பேரும் திடுக்கிட்டார்கள்..

பிறகு கோர்ட்டில் அவருக்கு விவாகரத்தும் கிடைத்துவிட்டது.. 3 நிமிடங்களுக்குள் விவாகரத்து கேட்ட அந்த பெண்ணை பற்றி இப்போது சோஷியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்படுகிறது..

சகிப்புத்தன்மை

2019ம் ஆண்டு இந்த சம்பவம் நடந்திருந்தாலும், பல்வேறு விவாதங்களை கிளப்பிவிட்டுள்ளது. “என்ன இருந்தாலும் அந்த பொண்ணுக்கு இவ்வளவு கோபம் கூடாது.. பொறுமையும், சகிப்புத்தன்மையும் பெண்ணுக்கு இல்லை” என்கிறார்கள் ஒரு தரப்பினர்.

ஆனால் மேலும் சிலரோ, “மிக சீக்கிரமாகவே அந்த பெண் விழித்துக்கொண்டுவிட்டார்.. இனியாவது அவருக்கு நல்ல வாழ்க்கை அமையட்டும்” என்றும் கருத்து கூறி வருகிறார்கள்.

கிரேட் எஸ்கேப்

இவர்களுக்கு நடுவில் மற்றொரு தரப்பினரோ, “நல்லவேளை.. அந்த பெண் ஆரம்பத்திலேயே கிளம்பிவிட்டார்.. மாப்பிள்ளை கிரேட் எஸ்கேப்” என்று மணமகனுக்கு ஆதரவாகவும் கமெண்ட்கள் வலம்வருகின்றன. ஆனால், திருமணமாகி 3 நிமிடத்திற்குள் விவாகரத்து கேட்ட இந்த பெண்ணின் திருமணம்தான் தற்போது உலகின் மிகக்குறுகிய திருமணம் என்று சொல்லப்படுகிறது.

இதற்கு முன்பு, கடந்த 2014-ம் ஆண்டு இங்கிலாந்தில் ஒரு திருமணம், 90 நிமிடத்தில் விவாகரத்தில் முடிந்தது குறிப்பிடத்தக்கது

Previous Story

"மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தவருடன்" திருமணம்!

Next Story

ஷேக் ஹசீனா கட்சி தலைவர் மேகாலயா எல்லையில் பிணமாக மீட்பு