மூடிய அறைக்குள் சிறிதரன்- சுமந்திரன் லடாய்

இலங்கை தமிழ் அரசு கட்சியின் அரசியல்குழு கூட்டம் கடந்த டிசம்பர் 21ஆம் திகதி கொழும்பில், இரா.சம்பந்தனின் வீட்டில் இடம்பெற்றிருந்தது. இந்த சந்திப்பு 22ஆம் திகதி தமிழ் பேசும் மக்களின் கட்சிகளின் கூட்டத்தில் கலந்து கொள்வது பற்றிய முடிவெடுக்கவே இடம்பெற்றிருந்தது.

இந்த சந்திப்பின் போது, எம்.ஏ.சுமந்திரனின் அரசியல் நடவடிக்கைகள், அணுகுமுறைகள் குறித்து சிறிதரன் எம்.பி விளாசித் தள்ளியதாக தகவல் கசிந்துள்ளது அதில் முக்கியமாக, அண்மைய்ல் இடம்பெற்ற எம்.ஏ.சுமந்திரன் வெளிநாட்டு பயணம் தொடர்பில் கடுமையான விமர்சித்தார் சிறிதரன்.

கட்சிக்கு தெரியாமல், கூட்டமைப்பிற்கு தெரியாமல் அமெரிக்கா சென்றது மிகத்தவறானது என சிறிதரன் கடுமையான வார்த்தைகளில் சுட்டிக்காட்டியதாகவும் தெரியவருகின்றது. அத்துடன், கனடாவிற்கு சென்ற சுமந்திரன் உரையாற்றிய போது,

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரணியை சாணக்கியனும், தானுமே நடத்தியதை போன்ற சாரப்பட உரையாற்றினார். ஆனால், அது தவறான கற்பிதம் என்பதை அப்போதே பலரும் சுட்டிக்காட்டியிருந்த நிலையில், அதனை சிறிதரன் சுட்டிக்காட்டினார்.

அது குறித்து சிறிதரன் கூறுகையில், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரணியில் நீங்களும் சாணக்கியனுமே நடந்ததை போல பேசியிருந்தீர்கள். நீங்கள் இருவருமா பேரணியில் கலந்து கொண்டீர்கள்.

பேரணியில் கலந்து கொண்ட மற்ற யாருமே உங்கள் கண்ணிற்கு படவில்லையா? நீங்கள் இருவருமே நடந்திருந்தால், யாருமே அதை திரும்பிப் பார்த்திருக்கமாட்டார்கள். அந்த பேரணியில் கட்சி பேதமின்றி அனைவரும் கலந்து கொண்டனர்.

அதனாலதான் வெற்றிபெற்றது. உங்கள் வழக்கமான பாணியில் அதற்கு நீங்கள் உரிமை கோருவதாலும் யாருக்கும் எந்த பிரச்சனையுமில்லை. ஏனெனில், மக்களிற்கு எல்லாம் தெரியும்’ என்றும் சிறிதரன் கூறியதுடன், சுமந்திரனின் அணுகுமுறையையும் கடுமையான விமர்சித்துள்ளார்.

அத்துடன் கூட்டங்களில், சந்திப்புக்களில் ஆவேசமாகவும், அகங்காரத்துடனும் பேசுவதை நிறுத்துங்கள் என்றும் சிறிதரன் காரசாரமாக விளாசியதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.

அதேசமயம் சிறிதரன் இவ்வாறு கடும் விமர்சனத்தை வைத்த போதும், சுமந்திரன் எந்த பதிலும் கூறாமல் இருந்ததாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை கடந்த பொதுத்தேர்தலில் எம்.ஏ.சுமந்திரனும், சி.சிறிதரனும் இணைந்து வாக்குக் கேட்டதுடன், வடமராட்சி கிழக்கில் நடந்த கூட்டமொன்றில், ‘அன்ரன் பாலசிங்கத்திற்கு பின்னர் எமக்கு எல்லாம் சுமந்திரன் தான் என கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  tw

Previous Story

சித்தப்பாவை அதிகாரிகள் ஏமாற்றிவிட்டர்கள்-நாமல்

Next Story

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு கொலைகள் 48 ஆவது நினைவு