முழு அளவு போருக்கு வாய்ப்புக் கிடையாது.!

-யும்னா லுத்பான்-

 Infographic: India vs Pakistan military stats 2025 covering Manpower, Defense Budget, Nuclear Arsenal, Air Power, Naval Power, and Ground Forces

என்னதான் இந்திய பாகிஸ்தான் நாடுகளுக்கிடையில் போர் பதட்டம் தொடர்ந்தாலும் நமது கணக்குப்படி முழு அளலான ஒரு போருக்கு வாய்ப்பே கிடையாது என்பதுதான் நமது கருத்து.

அப்படி ஒரு போர் துவங்கினால் வெற்றியையும் தோல்வியையும் பார்க்க எவரும் இரு நாடுகளிலும் மிஞ்சுவார்களா என்பது நமது சந்தேகம்.

எனவே ஊடகங்கள் என்னதான் தமது வாசகர்களை உசுப்பேற்ற சூடான செய்திகள் சொல்லிக் கொண்டிருந்தாலும் இரு நாடுகளும் நிதானப் போக்;குடன்தான் நடந்து கொள்ளும்.

ஆயினும் ஆங்காங்கு கௌரப் போரை இரு நாடுகளும் நடாத்தி சில நூறு அல்லது ஓரிரு ஆயிரம் பேர்வரையில் பலி கொடுக்கக் கூடும். இதற்கு மாற்றமாக இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் தலைமறைவு நாசகர நடவடிக்கைகள் பல நடக்கலாம்.

முழு அளவுப்போர் வராது என்று நாம் உறுதியாக சொல்ல இந்தியாவிடம் 140-150 வரையிலும் பாகிஸ்தானிடம் 160-170 வரையிலான அணு குண்டுகள் இருப்பதே காரணம்.

இதுதான் போரை தடுக்கின்ற சமநிலை அல்லது சமாதான விதி. என்றாலும் வருகின்ற சில மணி நேரங்கள் நெருக்கடி மிக்கதாகத்தான் இருக்கின்றது.

தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பதில் கொடுக்க வேண்டிய தேவை இந்தியாவுக்கு இருக்கின்றது. பதிலடிக்கு இடமும் சேதமும் என்ன என்றுதான் முடிவெடுக்க வேண்டி இருக்கின்றது.

Previous Story

தேர்தலில் நெருக்கமான போட்டி!

Next Story

அகுரண முஸ்லிம்களின் அரசியல் கூர்மை புள்ளடியில் வெளிப்படும்!