முன்னைய ஜனாதிபதிகளை போல் நானில்லை : அநுர 

முன்னாள் ஜனாதிபதிகள் போன்று அதிகாரிகளை அச்சுறுத்தும் நோக்கமோ ஊடகவியலாளர்கள் முன்னிலையில் அவர்களை பொறுப்புக்கூற வைப்பதிலோ தமக்கு விருப்பமில்லை என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதி அளித்துள்ளார்.

மாற்றத்திற்கான புதிய அணுகுமுறை சுய ஒழுக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை வளர்ப்பதை உள்ளடக்கியது என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

மக்களின் அபிலாசைகள்

தற்போதைய அரசாங்கம் அண்மைய ஆணையின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யத் தவறினால், அது சுபீட்சமான எதிர்காலத்தில், குடிமக்களின் நம்பிக்கையை இழக்கச் செய்யும் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

முன்னைய ஜனாதிபதிகளை போல் நானில்லை : அநுர உறுதி | I Am Not Like Previous Presidents Anura

எனவே, மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் அரசை கட்டியெழுப்புவதற்கு அரச அதிகாரிகள் தங்களை அர்ப்பணிக்க வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அமைச்சராக உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றதன் பின்னர் அதன் பணியாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

Previous Story

தொங்கிக் கொண்டு தப்பியோர்!

Next Story

நாடாளுமன்றத்தில் தமிழர் கூட்டணி!