முட்டிக் குனியும் இராஜதந்திரக் கதை

கோட்டாபய நிறுத்திய ஜப்பானின் அபிவிருத்தித்திட்டங்கள்:ஜப்பான் தூதுவரிடம் வருத்தம் தெரிவித்த அமைச்சர்

ஜப்பான் ஆரம்பிக்க திட்டமிட்டிருந்த சில அபிவிருத்தித்திட்டங்களை நிறுத்த ஏதுவாக அமைந்த அரசியல் தீர்மானங்கள் குறித்து வருந்துவதாக துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிதேகி முன்னிலையில் அமைச்சர் இன்று இந்த வருத்தத்தை வெளியிட்டுள்ளார்.

ஜப்பான் தூதுவர், அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை இன்று சந்தித்தார்.

கோட்டாபய நிறுத்திய ஜப்பானின் அபிவிருத்தித்திட்டங்கள்:ஜப்பான் தூதுவரிடம் வருத்தம் தெரிவித்த அமைச்சர்

ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட கட்டுநாயக்க விமான நிலையத்தின் இரண்டாம் கட்ட நிர்மாணிப்பு பணிகள் தாமதமானது சம்பந்தமாக தயாரிக்கப்பட்ட விசேட அறிக்கையை அமைச்சர் இதன் போது ஜப்பான் தூதுவரிடம் கையளித்துள்ளார்.

இலங்கை சிரமங்களுக்கு உள்ளான அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஜப்பான்  மக்கள் உதவ முன் வந்ததை மிகவும் கௌரவத்துடன் நினைவு கூருவதாக நிமல் சிறிபால டி சில்வா கூறியுள்ளார்.

கோட்டாபய ஜனாதிபதி பதவிக்கு வந்ததும் நிறுத்தப்பட்ட ஜப்பானின் திட்டம்

கோட்டாபய நிறுத்திய ஜப்பானின் அபிவிருத்தித்திட்டங்கள்:ஜப்பான் தூதுவரிடம் வருத்தம் தெரிவித்த அமைச்சர்

திருகோணமலை துறைமுகத்தை அண்மித்த பகுதியில் புதிய தொழிற்பேட்டைக்கான காணி ஒதுக்கப்பட்டுள்ளதுடன் அதில் முதலீடுகளை செய்யுமாறு ஜப்பான் முதலீட்டாளர்களை ஊக்குவிக்குமாறு அமைச்சர், தூதுவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவிக்கு வந்த பின்னர், ஜப்பானின் நிதியுதவியின் கீழ் கொழும்பு நகரில் நிர்மாணிக்கப்படவிருந்த இலகு ரக ரயில் போக்குவரத்து திட்டம் நிறுத்தப்பட்டது.

கோட்டாபய நிறுத்திய ஜப்பானின் அபிவிருத்தித்திட்டங்கள்:ஜப்பான் தூதுவரிடம் வருத்தம் தெரிவித்த அமைச்சர்

Previous Story

'ஒரு இதயத்தின் உளறல்'

Next Story

3 உலகப் போர் லண்டன் மீது முதல் குண்டு வீசப்படும் - ரஷ்யா