நஜீப்
நன்றி 28.12.2025 ஞாயிறு தினக்குரல்
அன்று கொழும்பு மாநகர சபையைக்கைப்பற்ற அரசும் எதிரணியும் பெரும் பிரயத்தனம் எடுத்தது. இதில் ஐமச. முஜிபுர் கடுமையாக உழைத்து அந்த முயற்சியில் தோற்றுப்போனார். அதே அணியில் இருந்தவர்களே முஜிபுர் தோல்வியையும் கொண்டாடினார்கள்.
இது தொடர்பாக 29.ஜூன்2025 ஞாயிறு இதழுக்கு ‘சட்டம் குளறுபடிகள் பல்டிகள்’ என்ற தலைப்பில் நாம் எழுதிய கட்டுரையில் யார் பதவியைக் கைப்பற்றினாலும் உள்ளாட்சி வரவு செலவுத்திட்டங்கள் வரும்போது அதற்கு பெரும் தலைவலி கொடுப்பார்கள் என்றும் சொல்லி இருந்தோம்.
அன்று ஆதரவளித்தவர்கள் ஒரு புனிதமான சபையை அமைக்க இந்த பல்டி என்றார்கள். அதனையும் நாம் குறிப்பிட்டிருந்தோம். வரவு செலவுத்திட்டத்திற்கு அரசுக்கு 57. எதிரணிக்கு 60.வாக்குகள்.
ஆனால் இனி ஆட்சி நமது கட்டுப்பாட்டில்தான் என்று முஜிபுர் கதை விட்டிருந்தார்.? தோற்றதற்காக ஆட்சி மாறாது. மிஞ்சிப்போனால் நிருவாகம் ஆணையாளரின் கீழ் வரும் இதனையும் அன்று கட்டுரையில் எச்சரித்திருந்தோம்.
திருத்தம்: நாம் கடந்த வராம் கண்டி மணிக்கூட்டு கோபுரம் பற்றி தந்த குறிப்பில் ஒரு தவறு. இஸ்மாயில் மகன் சகி இஸ்மாயில் கடுகண்ணாவையில் பலியான நாள் 1947ஆகஸ்ட14. என்று அது வந்திருக்க வேண்டும்.





