முக்கிய ஆவணங்களுடன் சுவிஸர்லாந்தில் தஞ்சமடைந்த புலனாய்வு அதிகாரி

இலங்கை அரசியலிலும் உலக தரப்பிலும் தற்போது சனல் 4 ஊடகம் வெளியிட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் ஆவணப்பட தொகுப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த தாக்குதல் பின்னணியில் இலங்கையின் பல முக்கிய அரசியல் வாதிகள் சம்மந்தப்பட்டிருப்பதாக அந்த ஆவணப்படத்தில் வெளிப்படுத்தப்படுகிறது.

குறித்த ஆவணப்படத்தில் இலங்கையின் முக்கிய புலனாய்வு அதிகாரியாக இருந்த நிசாந்த டி சில்வாவினுடைய கருத்துக்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

லசந்த விக்கிரமதுங்க படுகொலை

கேள்வி: ஏன் நீங்கள் இலங்கையில் இருக்காமல் இங்கு வந்திருக்கின்றீர்கள்?

பதில்: எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் இராணுவ புலனாய்வு பிரிவினர், கடற்படை புலனாய்வு பிரிவினர், முன்னாள் ஜனாதிபதி ஆகியோர் மரண அச்சுறுத்தல் விடுத்தனர்.

இலங்கையின் முக்கிய ஆவணங்களுடன் சுவிஸர்லாந்தில் தஞ்சமடைந்த புலனாய்வு அதிகாரி | Easter Attack Channel 4 Viral Video Pilliyan

பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்ட விவகாரமே நான் கையாண்ட விடயங்களில் முக்கியமானது.

இந்த விசாரணைகளின் போது அவருக்கு கிடைத்த ஆதாரங்கள் மிகவும் மோசமான செயற்பாடுகளிற்காக பெயர் பெற்ற திரிபோலி பிளாட்டுன் குறித்து அவர் விசாரணைகளை மேற்கொள்ளவேண்டிய நிலையை ஏற்படுத்தின.

 

EXCLUSIVE: இராணுவ அதிகாரி கைதால் அச்சமடைந்த பிள்ளையான்! ஓட்டுனர் கூறிய பல இரகசியங்கள்:- முன்னாள் சகா அதிரடி வாக்குமூலம் (Audio)

நான் திரிபோலி குழுவை சேர்ந்த ஐந்து நபர்களின் தொலைபேசி இலக்கங்களை கண்டுபிடித்தேன். அந்த தொலைபேசி இலக்கங்கள் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலைக்கு பயன்படுத்தப்பட்டன.

சிஐடிக்கு அழைக்கப்பட்ட கோட்டாபய

நான் தொலைபேசி ஆவணங்கள் உட்பட பல விடயங்களை ஆராய்ந்தேன். இடங்களை கண்டுபிடிக்க முயன்றேன். அவர் கண்டுபிடித்த ஆதாரங்கள் லசந்த படுகொலை செய்யப்பட்ட அன்று காலை அவரது வீட்டிலிருந்து திரிபோலி குழுவை சேர்ந்தவர்கள் அவர் கொல்லப்படும் இடம்வரை பின்தொடர்ந்ததை உறுதி செய்தன.

இலங்கையின் முக்கிய ஆவணங்களுடன் சுவிஸர்லாந்தில் தஞ்சமடைந்த புலனாய்வு அதிகாரி | Easter Attack Channel 4 Viral Video Pilliyan

பலர் கோட்டாபய ராஜபக்சவே லசந்த படுகொலையின் பின்னணியில் இருந்தார் என சந்தேகப்படுகின்றனர். தொலைபேசி உரையாடல்கள் குறித்த ஆவணங்களை ஆராய்ந்து அந்த சந்தேகம் சரியானது என்பதை உறுதி செய்தேன்.

ஆகவே நான் கோட்டாபய ராஜபக்சவை சிஐடிக்கு அழைத்தேன். அது ஒரு துணிச்சலான நடவடிக்கை. அதிகாரத்தில் இல்லாத போதிலும் கோட்டாபய ராஜபக்ச அச்சத்தை ஏற்படுத்தும் நபராக காணப்பட்டார்.

முக்கிய இடங்களில் செல்வாக்கு உள்ள நண்பர்கள் அவருக்கு இருந்தனர். கோட்டாபய ராஜபக்ச என்னிடம் நீங்கள் ஏன் என்னை லசந்த விக்கிரமதுங்க கொலைதொடர்பில் சந்தேகநபர் என குறிப்பிட்டுள்ளீர் என கேட்டார்.

சனல் – 4 ஊடகம்

அதற்கு நான் தேவையற்ற விடயங்களை செய்யவில்லை தேவையான விடயங்களை மாத்திரம் செய்கின்றேன் என தெரிவித்தேன். நீங்கள் யார் என்பது குறித்து எனக்கு கவலையில்லை என தெரிவித்தேன்.

இலங்கையின் முக்கிய ஆவணங்களுடன் சுவிஸர்லாந்தில் தஞ்சமடைந்த புலனாய்வு அதிகாரி | Easter Attack Channel 4 Viral Video Pilliyan

நான் உங்களை சந்தேகநபராக பெயரிட்டுள்ளேன் என தெரிவித்தேன். கோட்டபாய என்னை பற்றி அதிருப்தியடைந்தவராக காணப்பட்டார்.” என நிசாந்த தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த விடயங்களை சனல் – 4 ஊடகம் வெளியிடுவதற்கு முன்னர் லங்காசிறியியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரித்தானியாவின் இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெளிவு படுத்தியிருந்தார்.

Previous Story

வாராந்த அரசியல் 03.09.2023

Default thumbnail
Next Story

பாரதம் என்ற பெயர் எப்படி வந்தது?