முகத்திடல் வரும் சடலங்கள்!

 -நஜீப்-

தற்போது நாட்டில் நடக்கின்ற இரு விடயங்களை நாம் அவதானிக்க முடிகின்றது. முதலாவது நிலவும் பொருளாதார நெருக்கடி. அடுத்தது அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அடக்குவது தொடர்பான ஆளும் தரப்பு நடவடிக்கைகள்.

இந்த இரு காட்சிகளில் பாத்திரங்களாக நிறையப் பேரை நாம் அடயலப்படுத்த முடியும்.  ரணில், கோட்டா, மஹிந்த பசில், மொட்டுக் கட்சி கடும் போக்காலர்கள், படைத் தரப்பினர். போராட்டக்காரர்கள் என்று இதில் நிறையப் பேர் இருக்கின்றார்கள்.

பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கான தெளிவான எந்த நகர்வுகளையும் முன்வைக்கும் நிலைப்பாட்டில் ஆளும் தரப்பு இதுவரை இறங்கவில்லை. அதனால் நெருக்கடிகள் தொடரவும் மேலும் மோசமடையவும் அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன.

அடுத்து போராட்டக்காரர்களை அடக்கி அரசுக்கு எதிராக வரும் மக்கள் கிளர்ச்சிகளை முடக்கிப் போட ஆளும் தரப்பு தன்னாலான அனைத்து முயற்ச்சிகளையும் தற்போது மேற்கொண்டு வருகின்றது.

இதனால் நாட்டில் அடக்குமுறை.  பெத்தும் கேர்னல், ரெட்டா, தானீஷ் என்று பல நூறு பேர் இதுவரை கைதாகி இருகின்றது. அதன் குறியீடாகத்தான் பல சடலங்கள் தற்போது காலி முகத்திடலை நோக்கி  வந்து கொண்டிருக்கின்றன என்று எண்ணத் தோற்றுகின்றது.

நன்றி:07.08.2022 ஞாயிறு தினக்குரல்

Previous Story

சீனாவை தொடர்ந்து ஜப்பான்  கடனை இடைநிறுத்தம் 

Next Story

சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாகும் வறுத்த எள்ளு!