மீண்டும் வட கொரியா ஏவுகணை சோதனை!

அமெரிக்கா உட்பட பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அதிநவீன, ‘ஹைப்பர்சோனிக்’ வகை ஏவுகணை சோதனையை கிழக்காசிய நாடான வடகொரியா மீண்டும் நடத்தியுள்ளது.

பல நாடுகளின் எதிர்ப்புகளை மீறி அணு ஆயுத தயாரிப்பில் வட கொரியா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. ஒலியின் வேகத்தைவிட 5 மடங்கு அதிக வேகத்தில் பயணிக்கக் கூடிய அதிநவீன, ‘ஹைப்பர்சோனிக்’ வகை ஏவுகணையை வட கொரியா தயாரித்துள்ளது. கடந்தாண்டு செப்.,ல் இது முதல் முறையாக சோதனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த ஏவுகணை சோதனை இரண்டாவது முறையாக நேற்று நடந்தது. இந்த ஏவுகணை 700 கி.மீ., தொலைவில் உள்ள இலக்கை திட்டமிட்டபடி தாக்கியதாக வட கொரியா கூறியுள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு இடையே இந்த ஏவுகணை சோதனையில் வடகொரியா ஈடுபட்டுள்ளது, அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுக்கு விடுக்கப்பட்ட சவாலாக பார்க்கப்படுகிறது.

Previous Story

நாட்டின் பலபகுதிகள் இன்று இருளில்!

Next Story

USA ஒரே நாளில் 6.63 லட்சம் பேருக்கு கோவிட்