மீட்பாளராக வரும் ராசா!

-நஜீப் பின் கபூர்-

(நன்றி: 13.10.2024 ஞாயிறு தினக்குரல்)

இணக்க அரசியல் காலத்தின் கடமை ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா கருத்து - தமிழ்க் குரல்

தமிழரசுக் கட்சி அண்மைக் காலங்களில் விசமிகள் கட்டுப்பாட்டில் சிக்கி இருப்பது தொடர்பாக நாம் நிறையவே பேசி வந்திருக்கின்றோம். இனப்பிரச்சினைக்கு தீர்வு என்று சொல்லிக் கொண்டு சம்பந்தனும் சுமந்திரனும் கொழும்புத் தலைமைகளுடன் போட்ட நாடகங்கள்.

மாவையின் பித்தலாட்டங்கள் என்றெல்லாம் நாம் கேள்வி எழுப்பி வந்திருக்கின்றோம் அவர்கள் அப்படி நடந்து கொண்டதில் பொருளாதார நலன்கள் இருந்ருக்கின்ற என்பது தெளிவாகின்றது.

ஆனால் கட்சித் தலைவர் என்ற நிலையில் இருக்கின்ற சிறிதரன் ஏன் துனிச்சலுடன் செயலாற்றது சுமந்திரனுக்கு அஞ்சிக் கொண்டு நடந்து கொள்கின்றார் அது என் என்று சிரோஸ்ட ஜனாதிபதி சட்டத்தரணியும் தமிழரசுக் கட்சி முக்கியஸ்தருமான K.V.தவராசவை நாம் நேரடியாகத் தொடர்பு கொண்டு கேள்வி எப்பினோம்.

அவர் தனது அணியை களத்தில் இறக்கும் கடும் முயறச்சியில் அன்று இருந்ததால் பின்னர் பேசுவதாக கூறினார். சிறிதரனின் இந்தப் போக்கில் நமக்கு நிறையவே சந்தேகங்கள் வருகின்றன.

ஜனாநாயக தமிழரசுக் கட்சி என்ற பெயரில் சுமந்தரனின் கொட்டத்தை அடக்கவும் தமிழர்களை மீட்கவும் முற்படும் இந்த ராசவை நாமும் பாராட்டலாம்.

 

Previous Story

வேட்புமனு சமர்ப்பனமும் புதிய நாடாளுமன்றமும்!

Next Story

நயவஞ்சக அரசியலுக்கு வரும் ஆப்பு!