மிரட்டிய டிரம்ப்:ரஷ்யா பறந்த அஜித் தோவல் !

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷ்ய அதிகாரிகளை சந்திக்க மாஸ்கோ சென்றுள்ளார். அமெரிக்கா-இந்தியா உறவுகளில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா வரி விதிக்க அச்சுறுத்துகிறது. இந்தியா ரஷ்ய எண்ணெய் கொள்முதலை உடனே நிறுத்த வேண்டும் என்றும் டிரம்ப் எச்சரிக்கை விடுத்து வருகிறார்.

India With Congress on X: "Trump's 26% Tariff !! Modi's Vishwaguru Dream  Takes a Hit! With $23B in exports at risk India's GDP growth may dip and IT  stocks are already falling.

அடுத்த 24 மணி நேரத்தில் இந்திய பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும், வர்த்தகத்தில் அமெரிக்காவுடன் இந்தியா சிறந்த நண்பராக இல்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் குற்றச்சாட்டு வைத்துள்ளார். இந்த நிலையில்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தோவல் செவ்வாய்க்கிழமை மாஸ்கோ சென்றடைந்தார்.

Donald Trump India

அமெரிக்கா – இந்தியா பதற்றம்

இந்திய ரஷ்ய எண்ணெயை வாங்குவதை நிறுத்த மறுக்கிறது. இதனால், செவ்வாய்க்கிழமை டிரம்ப் வரி உயர்வை அச்சுறுத்தினார். ஏற்கனவே 25 சதவீத வரி இந்தியாவில் விதிக்கப்பட்டுள்ளது. அதை கணிசமாக அதிகரிக்கப் போவதாக அவர் கூறினார்.

இந்தியா அதிக அளவில் ரஷ்ய எண்ணெயை வாங்குகிறது. அதை அதிக லாபத்திற்கு வெளிச்சந்தையில் விற்கிறது. இதனால் வரி கணிசமாக அதிகரிக்கும் என அவர் தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கருத்துக்களைப் பொருட்படுத்தாமல், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெயை தொடர்ந்து கொள்முதல் செய்வதாக இந்தியா அறிவித்துள்ளது.

Big message! PM Modi strikes defiant 'Make in India' note in face of  Trump's tariff & penalty threats; India to continue buying Russia oil -  Times of India

இந்தியாவின் எரிசக்தி கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும் அது திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. டெல்லி, ரஷ்ய எண்ணெய்க்கான இறக்குமதியை நிறுத்திவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்த நிலையில், இந்த விளக்கம் வந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், இந்தியா ரஷ்ய எண்ணெயை வாங்குவதை நிறுத்திவிட்டதாக கேள்விப்பட்டதாக கூறினார். இதை அவர் ஒரு நல்ல நடவடிக்கை என்றும் குறிப்பிட்டார்.

ஆனால் ஏ.என்.ஐ (ANI) மற்றும் ராய்ட்டர்ஸ் (Reuters) வட்டாரங்கள் இந்திய அரசு அதிகாரிகளை மேற்கோள் காட்டி, டிரம்ப்பின் கூற்றை நிராகரித்து உள்ளன.

இந்திய எரிசக்தி கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை. விலை, தரம், போக்குவரத்து வசதி மற்றும் சந்தை நிலவரங்களின் அடிப்படையில் தான் எண்ணெய் நிறுவனங்கள் கொள்முதல் முடிவுகளை எடுக்கின்றன. ரஷ்ய இறக்குமதியை நிறுத்த எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை,” என்று கூறி உள்ளன.

இந்தியா – ரஷ்யா உறவுகளின் நிலை

இப்படிப்பட்ட நிலையில்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷ்ய அதிகாரிகளை சந்திக்க மாஸ்கோ சென்றுள்ளார். அங்கே பல முக்கிய சந்திப்புகளை அவர் மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது. இந்த பயணத்திற்கு முன் அஜித் தோவல் இந்திய குடியரசுத் தலைவர் முர்மு, பிரதமர் மோடியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியா டிரம்ப் மோதல்

ஏற்கனவே இந்தியா, ரஷ்யா இரண்டு நாடுகளின் பொருளாதாரமும் இறந்து போய்விட்டது.. ரஷ்யாவுடன் சேர்ந்து இந்தியா என்ன செய்தாலும் எனக்கு கவலையில்லை என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இரு நாடுகளும் தங்களின் பொருளாதாரத்தை தாங்களே அழித்துக்கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், இந்தியாவுடன் அமெரிக்கா மிகக் குறைந்த அளவிலேயே வர்த்தகம் செய்து வருகிறது. ஏனெனில், இந்தியாவில் விதிக்கப்படும் வரிகள் உலகிலேயே மிக அதிகமாக உள்ளன. அதேபோன்று, ரஷ்யாவுடனும் அமெரிக்காவுக்கு பெரிய அளவில் வர்த்தகம் இல்லை.

ஆகவே, இப்போது இருப்பது இப்படியே இருக்கட்டும். ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி மெட்வெடேவ் இன்னும் தன்னை ஜனாதிபதியாக நினைத்துக்கொண்டு வார்த்தைகளை கவனமாக கையாள வேண்டும். அவர் ஆபத்தான பாதையில் செல்கிறார்..

இந்தியா, ரஷ்யா இரண்டு நாடுகளின் பொருளாதாரமும் இறந்து போய்விட்டது.. ரஷ்யாவுடன் சேர்ந்து இந்தியா என்ன செய்தாலும் எனக்கு கவலையில்லை என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்

Previous Story

எளிமையான ஜனாதிபதி: மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய அநுர....! 

Next Story

இந்தியா டிரம்ப் மிரட்டலை  சமாளிக்குமா?