மஹிந்த தேசப்பிரிய துரோகியா!

 -நஜீப்-

அதிகாரத்தில் இருந்த போது ஜனரஞ்சகமான ஒரு தேர்தல் ஆனையாளராக தனது கடமைகளைச் செய்து வந்தவர்தான் மஹிந்த தேசப்பிரிய. கோட்டா ஜனாதிபதி வேட்பாளராக அனுமதிக்கபட்டது தொடர்பாக அவர் மீது ஒரு கலங்கம் இருக்கின்றது. இந்த நிலையில் தேர்தலை தள்ளிப் போடுவதற்கு ஆட்சியாளர்கள் இராஜதந்திர முயற்சிகளை மேற்கொண்டு வருவதும் தெரிந்ததே.

ஆளும் தரப்பு ஜனாதிபதி ரணிலை இந்த செயல்பாடுகளில் பாவிக்கின்றது. அதே நேரம் இந்த  சதியில் நாம் மேற்குறிப்பிட்ட மஹிந்த தேசப்பிரியாவையும் ஈடுபடுத்த ரணில்-ராஜபக்ஸ தரப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

உள்ளாட்சித் தேர்தல் வருகின்ற முதல் காலாண்டுக்குள் நடாத்தி முடிக்க வேண்டி இருக்கின்றது அதனைத் தவிர்க்க புதிய எல்லை நிர்ணயம் என்று ஒரு கதை நடக்கின்றது. தற்போது இருக்கின்ற 8000வரையிலான உள்ளாட்சி உறுப்பினர்களை 4000 வரை குறைப்பது நியாயமானது என்று தேசப்பிரியாவினதும் கருத்து இருக்கின்றது.

எல்லை நிர்ணயம் என்று வந்தால் குறிப்பிட்ட காலத்தில் தேர்தல் நடக்காது. எனவே இந்த சதியில் பிரியமானவர் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பது அனைவரது விருப்பமாகவும் இருக்கின்றது.

நன்றி:13.11.2022ஞாயிறு தினக்குரல்

Previous Story

இந்தோனேசியாவில் ஜி20 மாநாடு! புதின்....?

Next Story

இலங்கை பட்ஜெட் 2023