மலையகத்தார் முதுகில் குத்தாதீர்!

நஜீப்

நன்றி 16.11.2025 ஞாயிறு தினக்குரல்

வரவு செலவுத்திட்டம் தொடர்பாக என்னதான் இணக்கப்பாடுகள் முரண்பாடுகள் இருந்தாலும் நமக்கு மனநிறைவைக் கொடுக்கின்ற ஒரு செய்திதான் மலையக மக்களுக்கு 1750 என்று சம்பளம் நிர்ணயிக்கப்பட்டிருப்பதுதான்.

இந்த நாட்டில் வாழ்கின்ற சமூகங்களின் வாழ்க்கைத் தரங்களுடன் ஒப்புநோக்கின்ற போது மலையக மக்களின் வாழ்க்கைத் தரம் மிகவும் கீழ் மட்டத்தில் காணப்படுகின்றது என்பதனை எவரும் மறுக்க முடியாது.

எனவே அவர்கள் எத்தனையோ போராட்டங்களை நடாத்திய போதும் வழங்கப்படாத இந்த சம்பள அதிகரிப்பை அரசு வழங்கி இருக்கின்றது.

இதுவரை மலையக மக்களின் முதுகில் ஏறி உல்லாசம் அனுபவித்தவர்களுக்கும் போலி வாக்குறுதி கொடுத்தவர்களுக்கும் இது பேரதிர்ச்சியாக இருக்கின்றது.

எனவே இதனை எப்படியாவது தட்டிவிட வேண்டும் என்று சில கோடாரிக்காம்புகள் தொழிட்படுவதும், இதன் நம்பகத் தன்மை பற்றி கேள்வி எழுப்பி குழப்பத்தை ஏற்படுத்தவும் சிலர் முனைவதும் தெரிகின்றது.

மலையகத்தாரையும் மனிதர்களாக நாட்டில் வாழ வழிவிடுங்கள் அதுதான் மனித தர்மம்!

Previous Story

குரல்தரும் குறுஞ் செய்திகள்

Next Story

பிரபா - தாவூத் கூட்டணி பற்றிய அதிரடி தகவல்!