–நஜீப்–
இலங்கைக்கு ஐஎம்எப் வழங்குகின்ற கடன்களினால் இங்குள்ள பொது மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு வேட்டு வைக்கின்ற ஒரு சூழ்நிலை தற்போது தோன்றி இருக்கின்றது. இதில் மேற்கத்திய நாடுகளின் இரட்டை வேடம் தற்போது வெளியே தெரிய வந்திருக்கின்றன.
அரசின் வருமான அதிகரிப்பை இந்தக் கடன்கள் பணயம் வைப்பதால் தற்போதய ஆட்சியாளர்கள் இங்குள்ள மக்கனின் அடிப்படை உரிமைகளுக்கு பல்வேறு வழிகளின் வேட்டு வைக்கின்ற முயற்ச்சியில் இறங்கி இருக்கின்றார்கள்.

தற்போது அறிவிப்புச் செய்யபட்டிருக்கின்ற உள்ளாட்சித் தேர்தல் மக்கள் உரிமைக்கான போராட்டங்கள் மணவர்களின் எழுர்ச்சி கோஷங்கள் மற்றும் வேலை நிறுத்தப் போராட்டங்கள் என்பவற்றுக்கு பதவியல் இருக்கின்ற ஆட்சியாளர்கள் ஐஎம்எப் கடனைக் காரணம் காட்டி அடக்கி ஆளுகின்ற ஒரு நிலையும் நாட்டில் ஏற்பட்டிருக்கின்றது.
இப்படியாகச் சொல்வது நாமல்ல. மனித உரிமை கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மீனாச்சி கங்குலி. அவர் இது பற்றி சர்வதேசத்தை எச்சரித்திருக்கின்றார்.
நன்றி: 02.04.2023 ஞாயிறு தினக்குரல்





