மணிப்பூர் அவலம் உலகம் அதிர்ச்சி!

-யூசுப் என் யூனுஸ்-

மணிப்பூர் மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம் இந்தியாவுக்குப் பெரும் தலைகுணிவை ஏற்படுத்தி இருக்கின்றது. மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி-குகி இனங்களுக்கிடையில் கடும் மோதல் பல மாதங்களாக நடந்து வருக்கின்றது. இதில்  மைதேயி  இனத்தைச் சேர்ந்தவர்கள் குகி இனத்தவர்கள் மீது கடுமையான வன்முறைகளை மேற்கொண்டிருக்கின்றார்கள்.

In Shillong, Kukis fleeing Manipur violence find they are not welcome to stay

அதனால் அங்கு 138 பேர்வரை இதுவரை கொல்லப்பட்டிருக்கின்றார்கள். கடந்த மே மாதம் 4ம் திகதி தவ்பல் மாவட்டத்தில் குகி கிருஸ்தவ பழங்குடி மக்களுக்கு எதிராக வன்முறையை மேற்கொண்டவர்கள், அங்கு மூன்று பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வமாக அழைத்தச் சென்று அவர்களைப் பாலியல் ரீதியில் கொடுமைப்படுத்தி கற்பளித்தும் இருக்கின்றார்கள்.

Manipur: Thousands displaced as ethnic clashes grip north-eastern state - BBC News

இந்தச் செய்தி கடந்த ஜூலை 19ம் திகதிவரை வெளி உலகத்துக்குத் தெரிவரவில்லை. இது பற்றிய வீடியோ வெளி வந்ததால் உலகமே அதிர்ந்து போய் இருக்கின்றது. இந்தியா கொந்தளிக்கின்றது. தனது தந்தை மற்றும் சகோதரனையும் இவர்கள் கொன்றுவிட்டாதகப் பாதிக்கபட்ட ஒரு பெண் கூறுகின்றார்.

Horrific Scene in Manipur: Two Women Paraded Naked – Revoi.in

தனது ஆட்சி காலத்தில் பிரதமர் மோடி சந்தித்த மிகப் பெரிய நெருக்கடியாக இது இருக்கின்றது. ஆட்சியாளர்கள் இணையத் தளங்களைத் தடை செய்திருக்கின்றார்கள். நிர்வாணமாக பெண்களை அழைத்துச் செல்லும் விடியோவையும் அரசு தடை செய்திருக்கின்றது.

நன்றி: 23.07.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

ரணில் இந்திய விஜயம்: யாருக்கு இலாபம்?

Next Story

பாக்.காதலனை கரம் பிடிக்கச் சென்ற இந்திய பெண்ணுக்கு அமோக வரவேற்பு