இந்தோனேஷியாவில் ஷாக்
இந்தோனேஷியாவில் பள்ளி வளாகத்தில் அமைத்திருந்த மசூதியில் குண்டு வெடிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதில் 54 பேர் படுகாயமடைந்திருக்கின்றனர். காயமடைந்தவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில், “எங்களுக்கு கிடைத்த ஆரம்ப தகவலின்படி, சுமார் 54 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலருக்கு லேசான காயங்களும், சிலருக்கு மிதமான காயங்களும் உள்ளன. சிலர் சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

ஆரம்பக்கட்ட விசாரணையில், வெடிப்பு நடந்த இடத்தில் உடல் கவசம், துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டு தயாரிப்பு பொருட்கள் போன்ற பல பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையது” என்று கூறியுள்ளனர்.





