மகாராணிக்காக உம்ரா சென்றவர் கைது – சவூதி அரேபியா அதிரடி

காலஞ்சென்ற இரண்டாம் எலிசபெத் மகாராணிக்காக உம்ரா வழிபாட்டில் ஈடுபட முஸ்லிம்களின் புனித தளமான மக்காவுக்கு பயணித்த ஆடவர் ஒருவரை சவூதி அரேபிய நிர்வாகம் கைது செய்துள்ளது.

யெமன் நாட்டைச் சேர்ந்த அந்த ஆடவர் முஸ்லிம் அல்லாதோருக்கு தடுக்கப்பட்ட மக்கா பெரிய பள்ளிவாசலில் இருந்து கடந்த திங்கட்கிழமை சமூக ஊடகத்தில் வெளியிட்ட வீடியோ பதிவில், மகாராணிக்காக தாம் உம்ரா செய்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மக்கா யாத்திரையில் ஈடுபடுபவர்கள் பதாகைகள் அல்லது கோசங்களை மேற்கொள்வதற்கு தடை உள்ளது. இதனை மீறியதற்காகவே அவர் கைது செய்யப்பட்டதாக சவூதி நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

Previous Story

நியூஸிலாந்தில் இலங்கையர்கள் வந்து வாழலாம் - பாதுகாப்பு மற்றும் புலம்பெயர்வுக்கான அதிகாரி

Next Story

"வெந்து தணிந்தது காடு" விமர்சனம்