போலிக் காவி அதிரடி ஆட்டம்!

நஜீப்

நன்றி:25.01.2025 ஞாயிறு தினக்குரல்

கதை-1: யாழ்.பல்கலைக்கழக்கத்தில் ஒரு யுவதி தன்னை ஒரு பல்கலைக்கழக மாணவி என்று காட்டிக் கொண்டு பல மாதங்களாக அங்கு சுதந்திரமாக நாடகமாடி வந்திருக்கின்றார். பல்கலைக்கழக விடுதியிலும் தங்கியது மட்டுமல்ல அங்கு வகுப்புக்களுக்கும் கிரமமாக போய்வந்திருக்கின்றார்.

மாணவர்களைக் குழுக்களாகப் பிரிக்கின்ற போது ஒருவர் அங்கு மேலதிகமாக இருப்பது தெரிய வந்திருக்கின்றது. அவர் மூன்று பாடங்களில் சாதாரண சித்திபெற்ற கண்டியர் ஒருவராம்.!

கதை-2: அண்மையில் திருகோணமலை கடலோராக் காணியில் பலாத்காரமாக புத்தரை வைத்த கஸ்ஸபவும் ஒரு போலித் தேரர் என்று இப்போது பரபரப்பான விமர்சனங்கள். தற்போது தடுப்புக்காவலில் இருக்கும் கஸ்ஸப ஒரு போலித் தேரர் என்று தெரிய வந்திருக்கின்றது.

தனது தந்தையை அரிவாலால் வெட்டி முடமாக்கிய ஒரு மனிதன் தானாம் இந்தப்  போலிக் காவி. பொல்காவலையில் உண்மையில் இருக்கும் ஒருவர் பெயரில்தான் அவரது இந்த ஆட்டமாம்.

Previous Story

வெடிக்கும் போர்? ஈரானை சுத்துப்போட்ட அமெரிக்க

Next Story

காசுக்கு விற்கப்படும் பொய்கள்.!