பொரள்ளை தேவாலய கைக்குண்டு: நீதிமன்றம் உத்தரவு!

கொழும்பு பொரள்ளையில் அமைந்துள்ள அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் இருந்து கைக்குண்டு கைப்பற்றிய சம்பவம் தொடர்பான விசாரணைகளை துரிதமாக நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ராஜீந்திரா ஜயசூரிய இன்று உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பு குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவினருக்கு நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அத்துடன் சம்பவம் தொடர்பாக தடுப்பு காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள சந்தேக நபர்கள் குறித்த விசாரணைகளின் முன்னேற்றத்தை எதிர்வரும் 2 ஆம் திகதி நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள தேவாலயத்தின் ஊழியர் பிரான்சிஸ் முனிந்திரன் உட்பட மூன்று சந்தேக நபர்கள் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அரசகுலரட்ண, இந்த சம்பவம் தொடர்பான விசாரணை நடத்தப்படும் விதம் தவறானது என குற்றம் சுமத்தியுள்ளார்

Previous Story

பைடன் திட்டிய தகாத வார்த்தை

Default thumbnail
Next Story

தென் சீனக்கடல்: அமெரிக்க-சீன மோதல்