பொதுத் தேர்தல் கண்டி மாவட்டம்

2020 பொதுத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் போட்டியிடுகின்ற முஸ்லிம் வேட்பாளர்களில் ஏதோ வகையில் மிகவும் ஜனரஞ்சகமான மனிதராக இருப்பவர் லாபீர் ஹாஜியார் என்பதில் எந்த மாற்றுக் கருத்துக்களும் கிடையாது. சஜித் அணியில் அவருக்கு வாய்ப்புக் கிடைத்திருந்தால் நிச்சயம் அவர் அந்த அணியில் முதலாம் இடத்துக்கு வந்து சீனியர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருப்பார்.

ஆனால் அவருக்கு அந்த வாய்ப்புக் கிடைக்கவில்லை. அதனால் அவர் ஐதேக.வில் போட்டிக்கு வர வேண்டி வந்தது. இதனால் கண்டி முஸ்லிம் அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகள் இன்று ஏற்பட்டிருக்கின்றது.

அவர் ஒரு பெரும் செல்வந்தராக இல்லாவிட்டாலும் அவருக்கு பெரியதோர் ஆதரவாலர் கூட்டம் எப்போதும் இருக்கின்றது. அது அவர் மக்களுடன் என்றும் இருப்பதால். அவருக்கு அப்படி ஒரு இமேஜ். தேர்தல் களத்தில் அவருக்கு ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பலருக்கு பெரும் கலக்கம் ஏற்பட்டிருக்கின்றது.

யதார்த்தத்தை பேசுவதாக இருந்தால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆசனமொன்றை வென்றெடுக்கின்ற வாய்ப்பில் லாபீர் ஹாஜியார் அச்சானியாக இருக்கின்றார். ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரு ஆசனம் கிடைத்தாலும் இரு ஆசனங்கள் கிடைத்தாலும் அதில் முதலிடத்தில் வருபவர் லாபீர் ஹாஜிதான் என்பது அவருக்கு எதிராக சதி செய்பவர்கள் கூடத் தெரிந்து வைத்திருக்கின்றார்கள்.

இதானால் அவருக்கு எதிரான கீழ்த்தரமான பரப்புரைகளை சிலர் கையாட்களை வைத்துப் பரப்பிக் கொண்டிருக்கின்றார்கள். எனவே சமூகப் பிரதிநிதித்துவம் பற்றிப் பேசுகின்றவர்கள் நல்ல வாய்ப்புள்ள இந்த மனிதனின் வெற்றியை உறுதிப்படுத்த வேண்டிய கட்டாயம் இருக்கின்றது. அது அவர்களது சமூகக் கடமையும் கூட என்பதனை நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

இதற்கு முன்னர் கண்டியில் ஒரே நேரத்தில் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்திருக்கின்றார்கள் அதில் மூவர் தேர்தலில் நேரடியாக பெரும் எண்ணிக்கையான விருப்பு வாக்குப் பெற்று வெற்றி பெற்றவர்கள் அப்படியானால் வாக்கு வங்கி இன்னும் அதிகரித்திருக்கின்ற இந்த நேரத்தில் ஏன் லாபீர் ஹாஜியை ஒரு ஆபத்தான மனிதனாகக் காட்டி சமூகத்தை இவர்கள் ஏன் அச்சப்படுத்த வேண்டும்.

எனவே அடி மட்டத்திலுள்ள லாபீர் ஹாஜி பாராளுமன்றம் வருவதை ஜீரணித்துக் கொள்ள முடியாதவர்கள்தான் இப்படியான கதைகளைக் கட்டவிழ்த்து சமூகத்தின் பிரதிநிதித்துவத்தை கவிழ்த்துவிடப் பார்க்கின்றார்கள் என்பதனை சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே சமூகம் யதார்த்தத்தை புரிந்து கொண்டு புத்தி கூர்மையுடன் 2020 இந்தப் பொதுத் தேர்தலில் தனது வாக்குப் பலத்தை நிரூபிக்க வேண்டி இருக்கின்றது. ஒரு சமூக மாற்றத்துக்கான தெரிவாக லாபீர் ஹாஜிக்கு வாக்களிக்க வேண்டியும் இருக்கின்றது.

இறைவனும் இதற்குக் கை கொடுத்து சமூகமும் தனது புள்ளடிகளைச் சரியாக வழங்கினால் ஒரு சமூக மாற்றத்தை கண்டிய முஸ்லிம்கள் இந்த நாட்டுக்கே காட்சிப்படுத்த முடியும். அதற்கான தகைமையும் துணிவும் புத்திஜீவிகள் கூட்டமும் லாபீர் ஹாஜியாருக்குப் பின்னால் இருக்கின்றது. எனவே ஒரு சமூகப் புரட்சிக்காக லாபீர் ஹாஜிக்கு வாக்களியுங்கள்.

2 Comments

  1. **neurosharp**

    Neuro Sharp is a modern brain-support supplement created to help you think clearly, stay focused, and feel mentally confident throughout the day.

  2. **nervecalm**

    NerveCalm is a high-quality nutritional supplement crafted to promote nerve wellness, ease chronic discomfort, and boost everyday vitality.

Leave a Reply

Your email address will not be published.

Previous Story

வஞ்சிக்கப்படும் நமது இளசுகள்

Next Story

தற்கொலை!