பேராயர் கதை கேளுங்கள்!

-நஜீப்-

பேராயர் மெல்கம் ஈஸ்டர் படுகொலைகளுக்கு  நீதி கேட்டு இன்று ஜெனீவா போய் இருக்கின்றார். அது தொடர்பாக எமக்கு முரன்பாடுகள் கிடையாது. இது விடயத்தில் ஏன் இந்தளவு  தாமதம் என்பதுதான்  கேள்வி. ஆனால் இந்த மனித உரிமைகள் தொடர்பில் 2018. செப்தெம்பர் 23ம் திகதி ஞாயிறு ஆராதனையில் பேராயர் பக்தர்களுக்கு என்ன சொல்லி இருந்தார் என்று பாருங்கள்.

அவரது வார்த்தைகளை அப்படியே இங்கு தருகின்றோம். ‘மேற்கத்திய நாடுகளின் புதிய மதம்தான் மனித உரிமைகள் மனித உரிமைகள்… அவர்களுக்கு இதனை விட்டால் வேறு கதைகள் கிடையாது.

இந்த மனித உரிமைகள் பற்றி பேசுபவர்களைப் பார்த்தால் அவர்கள் சமயங்களைப் பின்பற்றாதவர்கள். இந்த மனித உரிமைகள் நமக்குத் தேவையில்லாத ஒன்று’ என்றும் சொல்லி அதற்கு எதிராக கடும் விமர்சனம் பண்ணியவர்தான் இவர்.

காரணம் அவர் அன்று ராஜபக்ஸாக்களுக்காக கடைக்குப் போய்க் கொண்டிருந்தார்-தேர்தல் பரப்புரைகள் செய்து கொண்டிருந்தார். இன்று அவர் தலை கீழாக நிற்க்கின்றார்.இவை எல்லாம் காலத்தின் கோலங்கள் என்று நாம் எடுத்துக் கொள்வோம்.

நன்றி:ஞாயிறு தினக்குரல் 06.03.2022

Previous Story

உக்ரைன் ஜனாதிபதி ஓடிவிட்டார்- ரஷ்யா

Next Story

ரஷ்யா-உக்ரைன் மோதல் இலங்கை மீதான தாக்கம்