புதிய சுதந்திரதினம் ஜூலை 9.

-நஜீப்-

நூறு நாட்களை எட்டி இருக்கும் கோட்டா கோ ஹோம் போராட்டம் தனது பிரதான வெற்றியை எட்டி இருக்கின்றது. ஜனாதிபதி கோட்டா தலைதெரிக்க ஓடிப்போய் இருக்கின்றார்.

சில நாள் நாட்டில் தலைமறைவாக இருந்தவர் மாலே போய் அங்கிருந்து சிங்கப்பூர் இறங்கி இருக்கின்றார். அவர் எப்படி மாலே வந்தார். அவரை அழைத்து வந்தது யார்?

என்று அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் தற்போது கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றது.

சிங்கப்பூரும் தாம் அவரை அங்கு நிரந்தரமாக வைத்திருக்க மாட்டோம் என்று அறிவித்திருக்கின்றது. இதற்கிடையில் சிங்கப்பூர் போன கோட்ட அங்கிருந்து தனது பதவி விலகல் கடிதத்தை அனுப்பி வைத்திருக்கின்றார்கள்.

ஜனாதிபதியை அவரது மாளிகையில் இருந்து துரத்திய ஜூலை 9ம் நாள்தான் இதன் பின்னர் நமக்கு உண்மையான சுதந்திர தினம். ஒரு கொடுங்கோலனிடமிருந்து    நாட்டைப் போராடிப் பெற்ற நாள் இது.

பெப்ரவாரி 4 என்பது எல்லோருக்கும் கொடுத்த போது நமக்கும் கிடைத்த சுதந்திரம். ஜூலை 9 தான் நாம் உண்மையில் போராடிப் பெற்றது சுதந்திரம் எனப் போராட்டக்காரர்களில் ஒருவர் ஊடகங்களில் பிரகடனம் செய்திருந்தார்.

நன்றி:17.07.2022 ஞாயிறு தினக்குரல்

Previous Story

மொட்டு அணி ஜனாதிபதி வேட்பாளர் ரணில்

Next Story

ஜனாதிபதி யார்?      என்ன நடக்கும்?