புதிய அரசியல் யாப்புக்கு 2/3 !

புதிய அரசியல் யாப்பொன்றை அமைத்து தாருங்கள் அப்போதுதான் நாட்டை உறுப்படியாக எமக்கு வடிவமைத்துத் தரமுடியும். என்று கேட்டிருக்கின்றார் பசில் ராஜபக்ஸ. இதற்கு முன்னர் தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாகப் பேசப்போன போதும் சம்பந்தர் அணியிடம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸாவும் புதிய அரசியல் அமைப்பில் அது எல்லாம் நடக்கும் என்று கூறி இருந்தார்.

எனவே மூன்றில் இரண்டு இல்லாவிட்டால் நாட்டில் எதுவுமே நடக்க வாய்ப்புக்களே கிடையாது என்பதுதான் இந்தக் கதைகளுக்கான விளக்கம். ஒருமுறை 18க்கு கை உயர்த்திய மு.கா.வினர் ரணில் பக்கம் பல்டியடித்த போது நாம் அன்று உயிர்களுக்குப் பயந்துதான் அப்படிச் செய்தோம் என்று நமக்கு பகிரங்கமாகவே கதை விட்டார்கள் தனித்துவக் காரர்கள். அதன் செயலாளர் ஹசனலி பிற்காலத்தில் இப்படிச் சொன்ன போது நாம் அப்போதே விமர்சனம் பண்ணி இருந்தோம்.

மீண்டும் அரசியல் அமைப்புப் பற்றி பேசப்படுகின்றது.மீண்டும் அவர்களுக்கு உயிராபத்து நிச்சயம் வரும். அவர்களை மீண்டும் பாராளுமன்றம் அனுப்பி வைக்க வேண்டுமா என்ற முடிவை சமூகம்தான் எடுக்க வேண்டும். இப்படியான தலைவர்கள் பற்றி சமூகம் எப்போதுதான் யோசிக்கப் போகின்றது.

ராஜபக்ஸாக்கள் மூன்றில் இரண்டு கேட்க்கின்ற போது கொடுத்து விடாதீர்கள் என்று இந்த முறை போர்க் கொடி பிடிக்கின்றார் அதுருலியே ரத்தன தேரர். நம்மவர்கள் அச்சம் பயம் உயிராபத்து என்று கூறி அதே காரியத்தை இந்த முறை நிச்சயம் பார்ப்பார்கள்! எனவே துனிச்சலானவர்களும் சமூக உணர்வுள்ளவர்களுமே பாராளுமன்றத்தில் இருக்க வேண்டும். அப்போதுதான் சமூகங்களுக்குப் பாதுகாப்புக் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published.

Previous Story

நாமே நமது துரோகி!

Next Story

கண்டியில் SLMC வாக்குப் பலம்