புக்கர் விருது:  ஷெஹான் கருணாதிலக்க மீது  குற்றச்சாட்டு

அண்மையில் புக்கர் விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்ட நூலின் கதை களவாடப்பட்ட ஒன்று என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலக்கிய உலகின் முக்கியமான விருதுகளில் ஒன்றாக புக்கர் விருது கருதப்படுகின்றது.

அண்மையில் பிரித்தானியாவில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வில் இலங்கையைச் சேர்ந்த ஷெஹான் கருணாதிலக்க புக்கர் விருது வென்றிருந்தார்.

ஏழு நிலவுகள்

புக்கர் விருது பெற்ற ஷெஹான் கருணாதிலக்க மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு | Booker Winner Shehan Karunatilaka Book Crisis

மாலி அல்மேதாவின் ஏழு நிலவுகள் என்ற நூலுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இந்தநிலையில் குறித்த நாவலின் கதை திருட்டப்பட்டது என பிரபல ஊடகவியலாளர் ராஜ்பால் அபேநாயக்க தெரிவித்துள்ளார்.

தமது நூல் பிரசூரிக்கப்படாத ஓர் நூல் என ராஜ்பால் என தெரிவித்துள்ளார்.

மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் ஷெஹான் தனது உரிமையை மீறி விட்டதாக ராஜ்பால் தெரிவித்துள்ளார்.

தான் எழுதிய நூலை நல்ல ஒரு பிரசூரிப்பாளர் ஒருவரிடம் வழங்குமாறு விடுத்த கோரிக்கையை ஷெஹான் துஸ்பிரயோகம் செய்துள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நூல் 2009ம் ஆண்டு எழுதப்பட்டது என ராஜ்பால் தெரிவித்துள்ளார். தமது நூலின் உள்ளடக்கத்தை களவாடி இவ்வாறு விருது வென்றெடுக்கப்பட்டுள்ளது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

தனது நூல் களவாடப்பட்டமையை நிரூபிக்கக் கூடிய பிரதான ஆதாரங்கள் காணப்படுவதாக ஊடகவியலாளரும் சட்டத்தரணியுமான ராஜ்பால் தெரிவித்துள்ளார்.

குற்றச்சாட்டுக்களை நிராகரித்த ஷெஹான் கருணாதிலக்க

புக்கர் விருது பெற்ற ஷெஹான் கருணாதிலக்க மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு | Booker Winner Shehan Karunatilaka Book Crisis

இதேவேளை, இந்த நூல் திருட்டு பற்றிய குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாக ஷெஹான் கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

தம்மை இழிவுபடுத்தும் நோக்கில் இவ்வாறு போலிக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் அதனை “அவமதிப்பு, ஆதாரமற்ற, மற்றும் அவதூறு” எனவும் அவர் விவரித்துள்ளார்.

இவ்வாறு அறிக்கையை வெளியிடுவது வருத்தமும் ஏமாற்றமும் அளிக்கிறது. இலங்கைக்கும் அதன் எழுத்தாளர்களுக்கும் இது ஒரு கொண்டாட்டமான தருணமாக இருக்க வேண்டும். இந்த விவகாரத்தில் நான் மேற்கொண்டு எந்த கருத்தும் தெரிவிக்க மாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.

Previous Story

மகிந்தவுக்கு பிரதமர் பதவி வேண்டும்-மொட்டுக் கட்சியினர்

Next Story

எரிபொருள் நெருக்கடி பின்னணியில் ராஜபக்ச புதல்வர்!