பிலிபைன்ஸ்:”ராய்” புயல்248 பேர் பலி

பிலிப்பைன்ஸ் நாட்டில் வீசிய கடும்புயல் காரணமாக, 248 பேருக்கு மேல் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.. இந்த பலி எண்ணிக்கை இன்னும் உயரும் என்கிற அச்சமான சூழல் அங்கு நிலவுகிறது.. முழுவீச்சில் ராணுவமும் போலீசும் மக்களை மீட்கும் பணியில் இறங்கி உள்ளனர்.

தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சின் மத்திய மற்றும் தென்கிழக்கு தீவு மாகாணங்களை ஒரு சக்தி வாய்ந்த புயல் தலைகீழாக புரட்டி போட்டுவிட்டது.. அந்த புயலுக்கு “ராய்” என்று பெயர்..

மணிக்கு 121 கிமீ முதல் 270 கிமீ வரை சூறாவளி காற்று சுழன்று சுழன்று அடித்தது.. இப்படி ஒரு சக்திவாய்ந்த புயல் சமீபத்திய வருடங்களில் பிலிப்பைன்சில் தாக்கியதில்லை..

போஸ்ட் கம்பங்கள்

அதுவும் 2 நாட்களாகவே புயல் வீசி கொண்டே இருந்திருக்கிறது.. இதனால் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன… போஸ்ட் கம்பங்கள் சரிந்து விபந்தன.. வீடுகளின் மேற்கூரைகள் காற்றில் பறந்தன… நடுக்கடல் கடும் கொந்தளிப்புடன் காணப்பட்டது.. கரையில் நிறுத்தப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான மீன்பிடி படகுகள் தூக்கி வீசப்பட்டன.. அவை அங்கிருந்த கடலிலேயே மூழ்கிவிட்டன.. புயலுக்கு பின்னாடியே பேய் மழை விரட்டி கொண்டுவந்தது.. ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டன..

விவசாய பயிர்கள்

அந்த வெள்ளத்தில் எண்ணற்ற கால்நடைகள் உயிருடன் அடித்து செல்லப்பட்டன… வாகனங்கள் நீரில் மிதந்தன.. புயல் காரணமாக 200-க்கும் மேற்பட்ட நகரங்களில் மின்வினியோகம் தடைபட்டு உள்ளது… தகவல் தொடர்பு சேவையும் முற்றிலும் முடங்கி போய்விட்டது.. வெள்ள நீரில் லட்சக்கணக்கில் பயிரிடப்பட்ட விவசாய பயிர்கள் நாசமாயின… இந்த புயல் ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்து அந்த நாட்டு மக்கள் மீளவில்லை.. பீதியில் உறைந்து போயுள்ளனர்.. சுமார் 8 லட்சம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது..

முகாம்கள்

3 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வீடுகள் இல்லை.. அவர்கள் எல்லாம் பாதுகாப்பான முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.. இந்த புயலில் போஹோல் பகுதிதான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது… அங்கு மட்டும் ராய் புயலுக்கு இதுவரை 68 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.. ஏராளமானோரை காணவில்லையாம்.. பலர் காயமடைந்துள்ளனராம்.. அவர்களை மீட்டு சிகிச்சை தரப்பட்டு வருகிறது. அதேபோல, பல்வேறு மாகாணங்களில் மக்கள் புயலில் சிக்கி உள்ளனர்..

ராணுவம்

இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 248-ஐ தாண்டி சென்று கொண்டிருக்கிறது.. ஆனால், இந்த பலி எண்ணிக்கை இன்னும் உயரும் என்கிறார்கள்.. காரணம், பல்வேறு மாகாணங்களில் தகவல் தொடர்பு பாதிக்கப்பட்டு உள்ளதால், இறப்பு எண்ணிக்கை முழுமையாக வந்து சேரவில்லை… முழுவீச்சில் மீட்பு பணிகள் நடந்து பிலிப்பைன்ஸில் கொண்டிருக்கிறது.. போலீஸ், ராணுவம், தீயணைப்பு துறை, கடலோர காவல் படை வீரர்கள் மிக மிக தீவிரமாக மக்களை காக்க தங்களை ஈடுபடுத்தி கொண்டுள்ளனர்..!

Previous Story

கொரோனா புதிய தகவல்கள்:20.12.2021

Next Story

இந்திய:5 கோடி வாக்குகள் பறிபோகும்?'