பிரபல உளவியல் நிபுணரும் மத்திய வங்கியின் முன்னாள் அதிகாரியுமான யூ.எல்.எம். நௌபர் காலமானார்கள்.
இவர் உடத்தலவின்ன மடிகேயைப் பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டவர்.
அன்னார் மர்ஹூம் உதுமாலெப்பை சுலைஹா பீபீ அவர்களின் புதல்வரும் மஹூபா அவர்களின் கணவரும் நுஸ்ரி, நசார், நஸ்மிதா, ஆகியோரின் தந்தையுமாவார்.
ஓய்வு பெற்ற ஆசிரிய ஆலோசகர் யூ.எல்.எம். பசீர், சட்டத்தரணியும் முன்னாள் ஐ.நா. அதிகாரியுமான மர்ஹூம் ஜௌபர், முன்னாள் இ.போ.சபை அதிகாரியும் ஆசிரியருமான நிசாஹீர், எம்சீர், சட்டத்தரணி உஸ்மான் மரிக்கார், ஆசிரிய ஆலோசகர் சிபார்தீன் மரிக்கார், ஆசிரியை ரம்சான், ரம்லான் (ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி) என்போரின் சகோதரருமாவார்.
ஜனாசா நாளை (05.05.2026) காலை 7.30.மணிக்கு அவரது களுபோவில வீட்டிலிருந்து நல்லடக்கத்துக்கு குப்பியவத்தை மையவாடிக்கு எடுத்துச் செல்லப்பட இருக்கின்றது.




