பிசுபிசுத்துப் போன பேரணி!

Anti-government Protest March And Rally In Colombo Opposition leader Sajith Premadasa participated in the anti-government rally on November 02, 2022 in Colombo, Sri Lanka. The opposition political parties Samagi Jana Balawegaya, led by Opposition Leader Sajith Premadasa, participated in this protest. Colombo Sri Lanka PUBLICATIONxNOTxINxFRA Copyright: xThilinaxKaluthotagex originalFilename: kaluthotage-notitle221102_npYcZ.jpg

-நஜீப்-

கடந்த இரண்டாம் திகதி பெரும் வளம்பரம் கொடுத்து கொழும்பில் நடந்த அரசுக்கு எதிரான போராட்டம் எதிர்பார்த்த இலக்குக்குப் பதிலாக பின்னடைவைச் சந்தித்தது என்றுதான் தெரிகின்றது. இந்தப் போராட்டத்துக்கு சஜித் அணியினரும் சு.கட்சியினரும் இன்னும் பல குழுக்களும் வந்திருந்தனர்.

மருதானை எல்பிஸ்டன் திரையரங்குக்கு முன்னால் துவங்கிய பேரணி சில மீற்றர் தூரமேனும் நகரவில்லை. பொலிசார் குறுக்கே வந்து நின்றார்கள். அந்த இடத்தில் சஜித்தும் அவருடன் இருந்த தலைவர்களும் கூட்டம் போட்டு பேரணியை நிறைவு செய்து கொள்ள முனைந்த போது போராட்டத்தில் வந்தவர்கள் அதற்கு தமது கடும் ஆட்சேபனையைத் தெரிவித்து முன்னோக்கிப் பயணிக்க வேண்டும் என்று கேட்டனர்.

அந்தச் சந்தர்ப்பத்தில் சஜித்தும் அவருடன் வந்த இதர அரசியல்வாதிகளும் களத்திலிருந்து ஸ்கெப்பாகி விட்டனர். இதனால் கூடி இருந்தவர்கள் சஜித்துக்கு ஹூ வைத்தனர். இப்போது இதுபற்றி ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் சஜித் தம்முடன் வந்தவர்கள் பலர் சொத்துக்களுக்கு தீ மூட்டும் எண்ணத்தில் வந்திருந்தனர்.

அத்துடன் அரசு பீச்சுகின்ற தண்ணீரில் குளிக்க வேண்டிய தேவையும் தனக்கு இல்லை என்று அவர் சொல்லி வருகின்றார். அதே நேரம் குறுக்கு வழியில் கோட்டைக்குப் போன ஹிருனிக்காவுக்கு ஒழுக்காற்றாம்! எப்படி இருக்கின்றது நியாயம்!

நன்றி– 06.11.2022 ஞாயிறு தினக்குரல்

Previous Story

உடதலவின்ன ஊடகக் கூட்டணியின் நோக்கங்கள்

Next Story

டி20 உலகக்கோப்பை 2022: பாகிஸ்தான்-இந்தியா  வாய்ப்பு?