பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்.!

பதறும் அமெரிக்கா..

வெறும் 90 நொடிகளில்

எல்லாமே முடிஞ்சுடும்

தைவான் விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் சீனா இடையே பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையே சீனாவில் உள்ள ஒரு தொலைதூரப் பாலைவனப் பகுதியில் அந்நாட்டு ராணுவம் அமைத்து வரும் ஒரு பிரம்மாண்ட அணு ஆயுத ராணுவக் கோட்டையின் சாட்டிலைட் படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

தைவான் விவகாரம் நாளுக்கு நாள் வெடித்துக் கொண்டே இருக்கிறது. ஒரு பக்கம் தைவான் தங்களுக்குச் சொந்தம் எனச் சீனா சொல்லி வருகிறது. இன்னொரு பக்கம் சீனாவுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை.. நாங்கள் தனி நாடு என்று தைவான் சொல்லி வருகிறது. தைவானுக்கு சப்போர்ட்டாக அமெரிக்காவும் வந்து நிற்கிறது.

இந்தப் பதற்றத்திற்கு நடுவே சில சாட்டிலைட் படங்கள் வெளியாகி பகீர் கிளப்பியுள்ளது.

ஆயுதக் கிடங்கு சீனாவில் உள்ள பாலைவனப் பகுதியில் அந்நாட்டு அரசு மிகப் பெரிய அணு ஆயுதக் கிடங்கை உருவாக்கி வருகிறதாம். அமெரிக்கா ஒருவேளை சீனாவின் மீது திடீர் அணுஆயுத தாக்குதல் நடத்தினாலும், அதனைத் தாங்கிப் பிடித்து சீனா திருப்பித் தாக்கும் திறனை உறுதி செய்வதற்காகவே இந்த மெகா உள்கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வருவதாகப் பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

ராய்ட்டர்ஸ் ஊடகம் ஆய்வு செய்த செயற்கைக்கோள் டேட்டாவின்படி, வடமேற்கு ஜின்ஜியாங் பிராந்தியத்தில் உள்ள ஹாமி என்ற இடத்தில் கடந்த 6 ஆண்டுகளில் இரண்டு பிரம்மாண்ட ராணுவக் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. பாலைவனத்தில் இதைச் சுற்றி 80க்கும் மேற்பட்ட ஏவுதளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கடந்த ஏப்ரல், மே மாதங்களில் இந்தப் பகுதியில் பிரம்மாண்ட ராணுவ வாகனங்கள் மற்றும் ஏவுகணைகளுடன் சீனா அதிரடிப் பயிற்சிகளில் ஈடுபட்டதும் செயற்கைக்கோள் படங்களில் தெரிய வந்துள்ளது. இங்கு ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள், பிரம்மாண்ட சாட்டிலைட் டிஷ்கள் மற்றும் இரண்டு மெகா டவர்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இவை சீனாவின் அணு ஆயுதச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் பவர்ஃபுல் சி3 (C3 – Command, Control, and Communications) மையமாகச் செயல்படலாம் என கார்னகி சர்வதேச அமைதிக்கான நிதியத்தின் மூத்த ஆய்வாளர் டோங் ஜாவ் கணித்துள்ளார்.

ஜி ஜின்பிங் அணு ஆயுத விவகாரத்தில் அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் தனி கவனம் செலுத்தி வருகிறார். அதன் கீழ் சீனா தனது அணு ஆயுதக் கிடங்கை வேகமாக மேம்படுத்தி வருகிறது. சீனா தனது முக்கிய மூன்று சிலோ தளங்களில் 100 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை ஏற்கனவே நிறுத்தியுள்ளதுடன், வரும் 2030ஆம் ஆண்டிற்குள் 1,000 அணு ஆயுதப் போர்க் கப்பல்களைக் களம் இறக்கவும் சீனா இலக்கு நிர்ணயித்துள்ளது.

பாதுகாப்பு அரண் அமெரிக்கா அல்லது ரஷ்யா போன்ற நாடுகள் தங்களிடம் உள்ள அதிக அணு ஆயுதங்களையே நம்பி இருக்கிறது. ஆனால், சீனா அப்படி இல்லை.. ஒரு வலுவான பாதுகாப்பு அரணை உருவாக்கியுள்ளது.

சீனாவின் ஹுவோயான்-1 செயற்கைக்கோள்கள் முன்கூட்டியே எச்சரிக்கும் அமைப்பைக் கொண்டுள்ளது. இது எதிரி நாட்டு ஏவுகணை ஏவப்பட்ட 90 நொடிகளில் அதைக் கண்டறிந்து, அடுத்த 3 முதல் 4 நிமிடங்களில் சீனக் கட்டுப்பாட்டு அறைக்கு அலர்ட் கொடுத்துவிடும்.

எதிரியின் ஏவுகணை வந்து தாக்கும் முன்பே சீனா தனது சிலோக்களில் இருந்து பதில் தாக்குதலை ஆரம்பித்துவிடும். அந்தளவுக்கு பக்காவாக பிளான் போட்டு சீனா காய்களை நகர்த்தி வருகிறது.

Previous Story

ළමා අපයෝජනයකට වරදකරු වූ පහළගම සෝමරතනට අනුර හරිනි සුබ පැතුවේ කොහොමද

Next Story

தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்!