பாக்., இடைத்தேர்தலில் இம்ரான் கட்சி அமோகம்

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் நடந்த இடைதேர்தலில், முன்னாள் பிரதமரான இம்ரான் கானின் ‘தெஹ்ரிக் – இ – இன்சாப்’ கட்சி, போட்டியிட்ட எட்டு இடங்களில் ஆறு இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

நம் அண்டை நாடான பாகிஸ்தானில் பிரதமராக இருந்த இம்ரான் கான் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்ததை அடுத்து பதவி விலகினார். இதைத் தொடர்ந்து, பொதுத் தேர்தலை முன்கூட்டியே நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறார்.

மேலும், மாகாணங்களில் இம்ரான் கானின் தெஹ்ரிக் – இ – இன்சாப் கட்சியைச் சேர்ந்த 131 எம்.எல்.ஏ.,க்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதையடுத்து பல்வேறு கட்டங்களாக இடைத்தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் எட்டு தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில், ஆறு இடங்களை இம்ரான் கான் கட்சியினர் கைப்பற்றியுள்ளனர்.

Previous Story

சதொச நிறுவனத்தின்  பொருட்களின் விலை குறைப்பு

Next Story

இப்படியும் நடந்தது - கண்கலங்க வைத்ததுடன் பெரும் ஆச்சரியம்