பாக்., அணுகுண்டு தயாரிக்க உதவியோர் மீது இஸ்ரேல் தாக்குதல் !

பாகிஸ்தானுக்கு அணுகுண்டு தயாரிக்க உதவிய வெளிநாட்டு நிறுவனங்கள் மீது இஸ்ரேல் உளவு அமைப்பான ‘மொசாத்’ வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது தற்போது அம்பலமாகியுள்ளது.

கடந்த 1981ல் ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் சுர் நகரில் உள்ள கோரா கோரா இன்ஜினியரிங் நிறுவனத்தின் தலைமைப் பொறியாளர் வீடு மீது குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டது.

அதே ஆண்டில் ஜெர்மனியின் வாலிஸ்ச்மில்லர், ஹெய்ன்ஸ் மெபஸ் நிறுவனங்களின் தொழிற்சாலை மற்றும் அலுவலகங்கள் குண்டு வைத்து தகர்க்கப்பட்டன. இந்த சம்பவங்களுக்கு தெற்காசியாவின் அணு ஆயுதங்கள் பரவல் தடுப்பு கூட்டமைப்பு பொறுப்பேற்றது. ஆனால் இந்த குண்டு வெடிப்புகளை நிகழ்த்தியது இஸ்ரேலின் உளவு அமைப்பான ‘மொசாத்’ என்பது தற்போது தெரியவந்துள்ளது.

இது குறித்து ‘ஜெருசலம் போஸ்ட்’ பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தி:கடந்த 1981ல் சுவிஸ், ஜெர்மன் நிறுவனங்கள் பாக்.,கிற்கு அணுகுண்டு தயாரிக்க உதவி வந்தன. இந்நிறுவன பொறியாளர்கள் பாக்., ஈரான் விஞ்ஞானிகளை சுவிட்சர்லாந்தில் ரகசியமாக சந்தித்து, அணுகுண்டு தயாரிப்பு குறித்து ஆலோசனை நடத்தினர்.

இந்நிறுவனங்கள் பாக்.,கிற்கு உதவுவதை தடுக்கும்படி சுவிஸ், ஜெர்மனி அரசுகளை அமெரிக்கா வலியுறுத்தியது. ஆனால் அக்கோரிக்கை ஏற்கப்படவில்லை. அதன் பின் மொசாத் வாயிலாக பாக்.,கிற்கு உதவிய சுவிஸ் நிறுவன பொறியாளர் வீடு மற்றும் ஜெர்மன் நிறுவனங்கள் மீது குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டது.

இந்நிறுவனங்கள் குறுகிய காலத்தில் வளர்ச்சி அடைந்து, பல கிளை நிறுவனங்களை துவக்கின. அவை, அணுகுண்டு தயாரிக்க தேவையான யுரேனியம் செறிவூட்டல் சாதனங்கள் உள்ளிட்டவற்றை தயாரித்து பாக்.,கிற்கு வழங்கின.இதனால் பாக்., 1998ல், முதன் முறையாக அணுகுண்டு சோதனைகளை ஐந்து தடவை நிகழ்த்தியது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அணு ஆயுதங்களை அதிகரித்து வருவதாக அமெரிக்கா சுமத்தியுள்ள குற்றச்சாட்டை சீனா மறுத்துள்ளது. மேலும், அணு ஆயுதப் போருக்கு எதிராக ஐந்து நாடுகள் கூட்டறிக்கை வெளியிட்டதில் தனக்கு முக்கிய பங்கு உள்ளதாகவும் சீனா கூறியுள்ளது.

ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பினர்களாக அமெரிக்கா,

சீனா,

பிரான்ஸ்,

ரஷ்யா,

பிரிட்டன்

ஆகிய ஐந்து நாடுகள் உள்ளன. இந்நாடுகள் இணைந்து ‘அணுஆயுதப் போர் நடக்கக் கூடாது; அதில் யாருக்கும் வெற்றி கிடைக்காது என்பதில் உறுதியாக உள்ளோம்’ என, சமீபத்தில் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.

 

Previous Story

ஐ.நா. கோட்டாவுக்கு பாராட்டு

Next Story

உலகில் 29.54கோடி பேர் கோவிட்