பாக்:இன்னும் சில நிமிடங்களில் பிரதமர் இம்ரான் கான் ராஜினாமா?

இஸ்லாமாபாத்-பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இஸ்லாமாபாதில் இன்று நடக்கும் பொதுக் கூட்டத்தில், தன் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அண்டை நாடான பாகிஸ்தானில், 2018ல் நடந்த பொதுத் தேர்தலில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ-இன்சாப், தனிப்பெரும் கட்சியானது.

சிறிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்த இம்ரான், பாக்., பிரதமராக பதவியேற்றார். இந்நிலையில் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகள் காரணமாக, இம்ரான் அரசு மீது, முஸ்லிம் லீக், பாக்., மக்கள் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், பார்லி.,யில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளன.

இதற்கிடையே, ஆளும் கூட்டணியில் இருந்து மூன்று கட்சிகள் வெளியேறின. இம்ரானின் கட்சியிலேயே, அவருக்கு எதிராக போர்க்கொடி துாக்கியுள்ள 24 எம்.பி.,க்கள், நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவாக ஓட்டளிக்க முடிவு செய்துள்ளனர்.

இதனால் இம்ரான் ஆட்சி கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இஸ்லாமாபாதில் இன்று நடைபெறும் தெஹ்ரீக் – இ – இன்சாப் கட்சியின் பொதுக் கூட்டத்தில், இம்ரான் கான் தன் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

மேலும், இம்ரான் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த, 50 பேரை, கடந்த சில நாட்களாக பொது இடங்களில் பார்க்க முடியவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது. பிரதமர் மீது பரபரப்பு புகார்இம்ரான் கான் அரசு எந்த நேரத்திலும் கவிழும் ஆபத்து உள்ள நிலையில், எதிர்க்கட்சியான பாக்., முஸ்லிம் லீக் – நவாஸ் கட்சியின் துணை தலைவர் மரியம் நவாஸ், இம்ரான் கான் மீது பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

இந்த இராஜினாமாச் செய்தியின் உண்மைத் தன்மை சில நிமிடங்களில் தெரியவரும். தற்போது  அவர் பிரமாண்டமான பேரணியில்  உரையாற்றிக் கொண்டிருக்கின்றார். அதில் இந்த அறிவிப்பு வெளிவரும் என்ற எதிர் பார்ப்பு நிலவுகின்றது.

Previous Story

அரபுக் கல்லூரிகளுக்கு ஆப்பு

Next Story

இம்ரான் கான் தலைவிதி இன்னும் சில மணி நேரங்களில் முடிவாகும்.!