பாகிஸ்தானில் மழைக்கு 657 பேர் பலி

பாகிஸ்தானில் பருவமழைக்கு இதுவரை, 657 பேர் பலியாகி உள்ளதாகவும், 1,000 பேர் காயமடைந்திருப்பதாகவும் அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

நம் அண்டை நாடான பாகிஸ்தானில் ஜூன் மாத இறுதியில் துவங்கிய பருவ மழை தீவிரமடைந்து, பஞ்சாப், சிந்து, பெஷாவர், கைபர் பக்துங்க்வா உட்பட பல மாகாணங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

 காஷ்மீரில் மேகவெடிப்பால்  ஏழு பேர் உயிரிழப்பு

ஆறுகள் நிரம்பி அபாய கட்டத்தை தாண்டி பாய்கின்றன. பாலங்கள், சாலைகள் அடித்துச் செல்லப்பட்டன. குடியிருப்புகளை திடீர் வெள்ளம் சூழ்ந்ததாலும், நிலச்சரிவுகளில் சிக்கியும் ஏராளமானோர் உயிரிழந்தனர்; பலர் மாயமாகியுள்ளனர்.

Pak flash floods Death toll rises to 307

நடப்பாண்டு பருவமழை, சமீபத்திய வரலாற்றில் மிகவும் மோசமான பேரழிவுகளில் ஒன்று என அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் கூறியுள்ளது.

கடந்த ஜூன் 26 முதல், பாக்., முழுதும் மழை தொடர்பான சம்பவங்களில், 657 பேர் இறந்துள்ளதாகவும், 1,000 பேர் காயமடைந்துள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது. அதிலும், கைபர் பக்துங்க்வா மாகா ணத்தில் மட்டும், 390 பேர் உயிரிழந்துள்ளனர்.

Previous Story

"ரஷ்யா - உக்ரைன் போர் முடிவுக்கு வரப்போகிறது”..டிரம்ப்

Next Story

மைத்திரி சொன்ன கதை!