பழைய முறையில் தேர்தல்!

நஜீப்

நன்றி 21.09.2025 ஞாயிறு தினக்குரல்

r/vexillology - a collage of different colored rectangular objects

அண்மையில் அமைச்சரவை மாகாணசபைத் தேர்தல் திருத்தங்களைச் செய்ய அனுமதி வழங்கி இருந்தது. இதற்கு எல்லை நிர்ணயம் என்று வந்தால் குறைந்தது மூன்று வருடங்களாவது செல்லும்.

எனவே முன்பிருந்த விகிதாசார முறையில் தேர்தல் நடாத்துவதற்கு அதிகமான வாய்ப்புக்கள் இருக்கின்றன என்று நாம் எதிர்பார்க்கின்றோம்.

இதற்கு சிறுபான்மை கட்சிகளும் தமது ஆதரவைக் கொடுக்கும். அரசு இது விடயத்தில் முரண்டு பிடிக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.

அண்மையில் முக்கியமான அமைச்சர் ஒருவர் பெரும்பாலும் பழைய விகிதாசார முறையில்தான் மாகாணசபைத் தேர்தல் நடக்கும் என நம்மிடத்தில் கூறினார்.

தாமதப்படுத்தாது தேர்தலுக்குப் போவது தமக்கே வாய்ப்பு என அரசு கருதுகின்றது. விகிதாசார முறையில் தேர்தலுக்கு சஜித் அணியினரும் எதிர்ப்புத் தெரிவிக்க வாய்ப்புக்கள் இல்லை.

அதே நேரம் தேர்தல் வந்தால் புதிய கூட்டணிக்கு வாய்பே கிடையாது என்பது சஜித் நிலைப்பாடாக இருக்கின்றது.

Previous Story

குரல் தரும் குறுஞ்செய்திகள்

Next Story

පාස්කුව ගැන ප්‍රකාශයක්