-நஜீப்-
நன்றி: 05.01.2025 ஞாயிறு தினக்குரல்
ஜனாதிபதி அனுரவுக்கு ஜனாதிபதி தேர்தலில் வெற்றியும் பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்தமைக்கு பிரதான எதிர்க் கட்சியாக இருந்த சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் பலயீனம்தான் அடிப்படைக் காரணம் என்பது அனைவருக்கும் தெரியும்.
நாம் கடந்த வாரம் சஜித்-இம்டியாஸ் மோதல் பற்றி பேசி இருந்தோம். இப்போது அது உச்சம் தொட்டிருக்கின்றது. காரணம் இம்டியாஸ் சஜித்துக்கு எதிராக தனது போராட்டத்தை துரிதப்படுத்தி இருப்பதாக நமக்குத் தகவல் கிடைத்திருக்கின்றது.
சஜித்துக்கு எதிரான போராட்டம் தொடர்பாக பல இடங்களில் இரகசிய கூட்டங்கள் நடந்து வருகின்றது. கட்சி புனரமைக்கப்பட வேண்டும். குறிப்பாக தலைமைக்கு கட்சிக்குள் தேர்தல் அவசியம் என்றும் கருத்துக்கள்.
இந்தப் பின்னணியில் இம்டியாசுடன் ஒரு இணக்கப்பாட்டுக்கு சஜித் வர வேண்டும் என்றும் ஆலோசனைகள். இது விடயத்தில் சஜித் விட்டுக் கொடுக்கவிட்டால் அவர் தலைமைக்கு ஆபத்து என்ற நிலை.
இதற்கிடையில் ரணில்-சஜித் (ஐதேக-ஐமச) இணைவுபற்றி மீண்டும் பேச்சு நடக்கின்றது.