‘பட்டினி’

காட்டுத் தீ-2

யூசுப் என் யூனுஸ்

1940-1960 1960-1980 1980-2000 2000-2020ம் 2020 க்குப் பிந்திய நமது கணக்கு இது. இப்படி ஒரு கணக்கை இதுவரை யாரும் பார்த்திருக்கின்றார்களா என்று நமக்குத் தெரியாது. சர்வதேச, தேசிய அரசியலில் இப்படி ஒரு கணக்கில் கதை சொல்ல நாம் இந்த வாரம் முயல்கின்றோம். நாட்டில் தற்போது உயிருடன் இருக்கும் பெரும்பாலான குடிகள் இந்தக் காலப்பகுதியில் வாழ்பவர்களாக இருப்பார்கள்.

என்றாலும் 1920முதல் 1940க்கு இடைப்பட்ட காலப் பகுதியில் வாழ்க்கின்ற மிகச் சிறிய ஒரு கூட்டமும் இருக்கும். வரலாறுகளை நேரடியாக கேட்டுத் தெரிந்து கொள்வதாக இருந்தால் இவர்களைத்தான் சாட்சிகளாக நாம் எடுத்துக் கொள்ள முடியும்.

தேசிய சர்வதேச அரசியல் பொருளாதார சமூகக் கலாச்சார மாறுதல்களை இருபது ஆண்டுகால எல்லைகளை வகுத்து ஆராய்ந்து பார்க்க நாடுகின்றோம். இந்த ஆய்வு விரிவானதல்ல தொட்டுச் செல்லும் ஒரு பார்வையாக இருக்கும். நமது நாடும் சர்வதேசமும் எப்படியாக இந்தக் காலப்பகுதியைக் கடந்து வந்திருக்கின்றது என்று பார்ப்போம்.

1940-1960: குடியேற்ற நாடுகள் தமது பிடியை தளர்த்த, பிரித்தானியாவிலிருந்து நமக்கு விடுதலை. உலக அரங்கில் ஹிட்லர் கனவுகள் முற்றுப் பெற்று ரஷ்யாவும் அமெரிக்காவும் ஆதிக்கப்போட்டியில் நுழைகின்றன.

பிரித்தானியாவுடன் நாம் சுதந்திரத்தைப் பெற்றுக் கொண்டாலும் முடிக்கான விசுவாசம் (1972 வரை) இருந்தது. அந்தக் காலகட்டத்தில் அதிகாரத்துக்கு வந்த தலைவர்கள் மேற்கு நாடுகளுடன் நெருக்கமான உறவில் ஆர்வமாக இருந்தனர். இதற்கு முடியின் செல்வாக்கு காரணமாக இருந்திருக்கலாம்.

இந்தக் காலத்தில் இலங்கை அரசியலில் ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து பிரிந்து எஸ்டப்ளியு.ஆர்.டி. பண்டாரநாயக்க தலைமையிலான ஸ்ரீ.ல.சு.கட்சி மேற்கத்திய ஆதரவுப் போக்கிலிருந்து விலகி இடதுசாரிகளுக்கு ஆதரவான உலக அணியுடன் பயணிப்பதில் ஆர்வமாக இருந்தது. எனவேதான் சீனா, ரஷ்யா போன்ற நாடுகளுடன் நெருக்க உறவை அது நாடியது. அதே நேரம் மேற்கு நாடுகளுடனும் நல்லுறவில் இருந்தது.

இதுதான் நாம் பெருமையுடன் சொல்லிக் கொள்கின்ற ஜப்பானுக்கு அடுத்த படியாக நாம் ஆசியாவின் செல்வந்த நாடாக இருந்து கதையும் வருகின்றது. நமது நாட்டில் முதலாவது பிரதமர் பண்டா படுகொலையும் 1959 நடக்கின்றது. கொலைக்கும் சிஐஏக்கும் முடிச்சுப் போட்டுப் பேசுகின்ற கதைகளும் இருக்கின்றன.

1960-1980:இது  அமெரிக்கா-ராஷ்யா உலக ஆதிக்கத்தில் உச்ச கட்டப் போட்டியில் இருந்த இரு தசாப்தங்கள்.  உலகில் பெரும்பாலான நாடுகள் ரஷ்யா ஆதரவுப் போக்கைப் பின்பற்றி வந்தன. ஐ.நா., அணிசேர ஒலிம்பிக் என்று உலகில் ரஷ்யா ஆதிக்கம் கொடி கட்டிப் பறந்தது.

அப்போது உலகம் பூராவிலும் சோஸலிச மேனியா.  ஆப்போது உள்நாட்டில் சு.கட்சியும் ஐதேக.வும் மாறி மாறி அதிகாரத்தில் இருந்தன. 1971ல் ஸ்ரீமா ஆட்சியில் இளைஞர் இங்கும் சோஸலிச அரசுக்கான போராட்டத்தில் இறங்கி அதில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பலியானார்கள்.

1980-2000:உலக அரங்கில் சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சியாக அமைய, அமெரிக்க ஏதேச்சாதிகாரம் உலகில் கொடி கட்டிப்பறந்தது. மேற்கு கிழக்காகு என இதுவரை பிளவுபட்டிருந்த ஜேர்மன் ஐக்கியப்பட பேர்லின் மதில் தகர்ந்தது. வோர்சோ கூட்டணி சிதறடிக்கப்பட்டது. இங்கு ஜேஆரில் துவங்கிய ஐதேக ஆதிக்கம் ஜனாதிபதி பிரேமதாச கொல்லப்படும் வரை நீடித்தது. வடக்குக் கிழக்கில் இளைஞர்கள் ஈழ விடுதலைப் போராட்டத்தைத் துவங்கி இருந்தனர். 1994ல் சந்திரிக்கா பதவியில் அமரும் வரை ஐதேக. ஆதிக்கம் தொடர்ந்தது.

தெற்கில் மட்டுமல்ல வடக்கு கிழக்கு சிறுபான்மை சமூகங்களும் சந்திரிக்காவுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்தனர். இலங்கை அரசியலில் சு.கட்சி தலைமையிலான ஒரு அரசுக்கு இப்படி ஒரு ஆதரவை சிறுபான்மை சமூகம் இதுவரை கொடுக்கவில்லை. இந்நாட்களிலும் ஏறக்குறைய நாட்டில் இரு அரசுகள் என்ற நிலை. வடக்கு கிழக்கில் கணிசமான பகுதிகள் விடுதலைப் புலிகளின் ஆதிக்கத்தில் இருந்தது.

2000-2020: அமெரிக்கவின் ஏக ஆதிக்கப்பிடியிலிருந்து விலாடிமீர் புதின் உலகை விடுவித்தார். அல்லது ரஷ்யாவை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வந்த காலப்பகுதியாக இதனைப் பார்க்கலாம். அதே நேரம் ஆபிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த பராக் ஓபாமா அமெரிக்கா அதிபராக வந்ததும் சிறப்பம்சமாக இருந்தது.

ரஷ்யா மீண்டும் சுதாகரித்துக் கொண்ட நிலையில்  சீனா அமெரிக்காவுக்கு மிகப் பெரிய சவாலைக் கொடுத்த காலப்பகுதியாகவும் இது அமைந்தது. இன்று பொருளாதார ரீதியிலும் இரணுவ ரீதியிலும் சீனா அமெரிக்காவுக்கு மிகப் பெரிய சவாலாக வளர்ந்து விட்டது. தனது பட்டுப் பாதைத் திட்டத்தில் அது உலக நாடுகளைத் தனது வலைக்குள் போட்டுக் கொள்கின்ற முயற்ச்சியில் பல படிகளைத் தண்டி விட்டது. ரஷ்யா சீனாவின் நெருக்கமும் இந்தியாவின் தனித்துவப் போக்கும் உலக அரங்கில் அமெரிக்காவுக்குப் பெரும் பின்னடைவாகப் பார்க்க வேண்டும்.

சந்திரிக்காவைத் தொடர்ந்து பதவிக்கு வந்த மஹிந்த ராஜபக்ஸ 2009 போர் வெற்றியினால் தெற்கில் ஹீரோவானார். அப்போதும் ராஜபக்ஸாக்கள் ஆட்சி நெடுங்காலம் நீடிக்கும் என்ற நம்பிக்கை நாட்டில் ஏற்பட்டது. கூட இருந்த மைத்திரி அடித்த பல்டி, பின்னால் இருந்து சந்திரிக்க-சோபித தேரர்கள் வகுத்த வியூகங்கள் காரணமாக 2015ல் மஹிந்தாவுக்கு தேர்தலில் அதிர்ச்சித் தோல்வி.

இதனால் அவர்   மெதமூலன ஜன்னல்களில் போய்த் தொங்க வேண்டி வந்தது. மைத்திரிக்கும்-ரணிலுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நல்லாட்சிக்கு வேட்டு வைத்தது. குறுகிய காலத்துக்கள் தங்களை சரி செய்து கொண்ட ராஜபக்ஸாக்கள் மொட்டுக் கட்சி சமைத்து உள்ளாட்சித் தேர்தலில் பெருவெற்றி பெற்றனர். இந்தப் பின்னணியில்தான் கடும் போக்கு பேரின வாதத்தை முன்னிருத்திய கோட்டா அரசியல் நாட்டில் உச்சம் தொட்டிருந்தது. ஏறக்குறைய 74 சதவீதமான பேரினத்தார் தங்களது வாக்குகளை கோட்hவுக்கு நல்லாச் செய்ய அள்ளிக் கொட்ட 69 இலட்சம் வாக்குகளுடன் மனிதன் ஜனாதிபதியானர்.

2020:நமது ஆய்வின் படி எமது கணக்கு 2040 வரை பயணிக்க வேண்டி இருக்கின்றது. இதில் ஏறக்குறைய மூன்று வருடகள் கடந்த காலமாகவும் பதினேழு வருடங்கள் எதிர்காலத்தையும் மையப்படுத்தியதாக இருக்கின்றது. உலக அரங்கில் உக்ரைனை மையப்படுத்தி ஒரு பலப்பரீட்சை நடக்கின்றது. இது முற்றிலும் அமெரிக்க-ரஷ்ய பலப்பரீட்சை. இதில் ரஷ்யா தனித்தும் அமெரிக்கா-மேற்கத்திய கூட்டணியும் களத்தில் சமர் புரிக்கின்றன. இது முற்றிலும் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்குமான கொளரவப் போர்.

இப்போது உள்நாட்டு விவகாரத்தைப் பார்ப்போம். அதுபற்றி எதிர்காலத்தில் நிறையப் பேச வேண்டி இருந்தாலும், இங்கு ஒரு சிறுகுறிப்பை மட்டும் பதிந்துவிட்டு காட்டுத் தீயிலிருந்து வெளியேற நாடுகின்றோம். விஜயனில் துவங்கிய நமது மன்னராச்சி, ஐரோப்பிய ஆட்சி மற்றும் சுதந்திரத்தக்குப் பின்னலான 74 ஆண்டுகால வரலாற்றில் எங்குமே பார்த்திராத ஒரு அவலத்தில் நாடு இன்று இருக்கின்றது.

இது ஆட்சியாளர்களின் தான்தோன்றித்தனம் சுரண்டல் பிடிவாதம் வஞ்சகத்தனம் இனவாதம் குடும்ப ஆதிக்கம் என்பவற்றால் உருவாக்கப்பட்டவை. உலக அரங்கிலும் நாம் தனித்து விடப்பட்டிருக்கின்றோம். இந்தியாவும் சீனாவும் இதற்கு மேலும் ஓசிச் சோறு போட முடியாது என்று நிலையில் நமது யாசகம் தொடர்கின்றது.

சர்வதேசம் இந்த ஆட்சியாளர்கள் இருக்கும் வரை உதவி கிடையாது எனவும், ஆட்சியாளர்களே எமக்கு 69 இலட்சம் பேர் ஆணை இருக்கின்றது. காலம் முடியும் வரை அசைய மாட்டோம் என்று இருக்கின்றார்கள். குடிமக்கள் பணயம் வைத்து இங்கு ஆட்டம் நடக்கின்றது.  இதுதான் ராஜாக்கள் சொன்ன ஆசியாவின் ஆச்சர்யமாக்கும்.! பட்டினியால் வரும் இறப்புக்கள் படுகொலை என்றுதான் வரலாற்றில் பதிவாகும். இந்நிலையில் தெருவில் வரிசையாக நின்று செத்து மடிவதற்கு எதிராக போராடுவோம். வீதிக்கு வாருங்கள்  என்று மக்களுக்கு அழைப்பு விடுக்கின்றார் ஜேவிபி தலைவர் அணுர குமார திசாநாயக்க.

நன்றி:26.06.2022 ஞாயிறு தினக்குரல்

Previous Story

நான் முட்டாள்  அல்ல - ரணில்

Next Story

ஜனாதிபதிGR தனது நிகழ்ச்சிநிரலையே முன்னெடுக்கின்றார்- வேலு குமார்.MP