நஜீப்
நன்றி 16.11.2025 ஞாயிறு தினக்குரல்
சுதந்திரத்துக்குப் பின்னர் என்பதாவது வரவு செலவுத்திட்டத்தை ஜனாதிபதி அணுர சமர்ப்பித்து அதற்கான விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் அரசு சமர்ப்பித்த பட்ஜெட்டால் பிரதான எதிரணியான ஐமச.குள் ஒரு பனிப்போரே நடந்து வருவதை அனைவரும் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது.
சஜித் அணியில் இருக்கின்ற அர்ஷத டி சில்லா கபீர் ஹாசிம் போன்றவர்கள் இதிலுள்ள நல்ல விடயங்களைப் பகிரங்கமாக சிலாகித்துப் பேசி இருந்தார்கள். குறிப்பாக அர்ஷ என்றுமில்லாதவாறு இன்று கஜானா நிரம்பி வழிகின்றது என்று அரசைப்பாராட்டி இருந்தார்.
இன்னும் பலரும் இதற்குச்சான்றிதழ் கொடுத்திருந்தார்கள். ஆனால் இது ஐந்து சதத்துக்கும் பிரயோசனமில்லாத ஒரு வரவு செலவுத் திட்டம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் சாடுகின்றார். இது என்ன முரண்பாடு!
21ம் திகதி எமது பேரணிக்குப்பயந்தே அனுர சிறப்பான பட்ஜெட்டை சமர்ப்பித்திருக்கின்றார் என்கிறார் நாமலின் பிரதமர் ஜொன்ஸ்டன் பர்ணாந்து.





