பட்சோந்திக் காவல் துறை!

-நஜீப்-

(நன்றி ஞாயிறு தினக்குரல்- 20.07.2025) 

நமது பொலிஸ் சில சமயங்களில் மேற்கொள்கின்ற நடவடிக்கைகளைப் பார்க்கும் போது பட்சோந்திகளுக்கும் இவர்களுக்கும் எந்த வித்தியாசம் கிடையாது என்று நிரூபனமாகி இருக்கின்றது.

இஸ்ரேல் கொடியை அவமதித்தது தொடர்பாக மாவனெல்ல இளைஞன் சுகைலை தெஹிவளை பொலிஸார் கைது செய்திருந்தனர்.

சந்தேக நபர் மீது பாரதூரமான குற்றங்களுக்கான ஆதரங்கள் இருக்கின்றன என்று நீதி மன்றில் சொல்லி அன்று சுகைல் பிணைக்கு  தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.

அதே தெஹிவளை பொலிசார் ஒன்பது மாதங்களுக்கு பின்னர் சுகைல் மீது எந்த குற்றசாசாட்டுக்களும் இல்லை என்று நீதி மன்றத்தில் சொல்லி அவரை விடுதலை செய்யலாம் என்று கூறியது.

ஏன் முன்னுக்குப் பின் முரணாக இப்படிப் பேசுகின்றீர்கள் என்று நீதிபதி கேள்வி எழுப்பிபோது பொலிஸார் அங்கு வாயடைத்து நின்னறார்கள். சுகைல் தற்போது பிணையில் விடுதலையாகி இருக்கின்றார்.

இப்படித்தான் பல ஆயிரம் தமிழ் இளைஞர்கள் எந்தவிதமான குற்றச்சாட்டுக்களும் இல்லாது தமது வாழ்நாள் முழுதும் சிறையில் வாடி  வந்தனர். இது என்ன அநீயாயம்.

Previous Story

பெட்டிப் பாம்பு பிரதிநிதிகள்.!

Next Story

பிள்ளையான் தகவல் வெளியிட்டார்! கெப்பிட்டிக் பஸ் குண்டு ஆட்சியாளர்களின் சூழ்ச்சியா?