படை வீரர்களின் விடுமுறை ரத்து! அரசு சிவிலியன்களுடன் போருக்குத் தயாராகின்றதா?

நாட்டில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப் பட்டதைத் தொடர்ந்து உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அனைத்து பாதுகாப்புப் படை வீரர்களின் விடுமுறையும் ரத்து செய்யப்படுவதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

நாட்டில் நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அவசரகாலச் சட்டத்தை ஜனாதிபதி மீண்டும் நடைமுறைப்படுத்தியுள்ளார்.

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது ஜனாதிபதி அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப் படுத்தியுள்ளமைக்க உள் நாட்டிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் கடும் கண்டனங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.

அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தி மக்களின் அமைதியான போராட்டம் மீது கைவைக்க வேண்டாம் எனவும் அரசாங்கத்திடம் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

Previous Story

ராஜபக்சவினர் இல்லாத அரசாங்கத்தின் பொறுப்பை ஏற்க தயார்

Next Story

கிழக்கு ஆசிரிய நியமனங்கள்: மீளாய்வு செய்யவும்- இம்ரான்MP